சிறப்பு சட்டம் திருத்தம் கொண்டு வந்து, அனைவருக்கும் பணி வழங்கவேண்டும்...பாமக வலியுறுத்தல்!
Special laws should be amended and jobs should be given to all... Insistence!
நடப்பு கூட்டத்தொடரில் சிறப்பு சட்ட திருத்த மசோதா கொண்டு வந்து கொண்டு அரசு வேலை நம்பி பல்வேறு துறைகளில் பணிக்கு வந்தவர்களை மீண்டும் பணிநியமனம் , பதவி சம்பள உயர்வு செய்ய வேண்டும் என புதுச்சேரி மாநில பாமக அமைப்பாளர் கணபதி வலியுறுத்தியுள்ளார்.
இது குறித்து புதுச்சேரி மாநில பாமக அமைப்பாளர் கணபதி, துணைநிலை ஆளுநருக்கு அனுப்பிய கடிதத்தில் கூறியதாவது :நடப்பு கூட்டத்தொடரில் சிறப்பு சட்ட திருத்த மசோதா கொண்டு வந்து கொண்டு அரசு வேலை நம்பி பல்வேறு துறைகளில் பணிக்கு வந்தவர்களை மீண்டும் பணிநியமனம் , பதவி சம்பள உயர்வு செய்ய வேண்டும் என வேண்டுகோள்.
வருகின்ற 10.03.25 அன்று பட்ஜெட் சட்டப்பேரவை கூட்டத்தொடர் நடைபெற உள்ளது, ஆனால்
கடந்த மூன்று ஆண்டுகளாக சட்டப்பேரவை கூட்டத் தொடரில் முதல்வர் அவர்களும் துறை அமைச்சர் அவர்களும் அறிவிக்கும் எந்த அறிவிப்பும் அரசாணைகளையும் நிறைவேற்ற முடியாமல் இந்த அரசு திணறி வருகிறது. கடந்த சட்டப்பேரவை கூட்டத்தொடரில் முதல்வர் அவர்கள் கீழ்கண்ட பணியில் சேர்ந்தவர்களுக்கு மீண்டும் பணி வழங்கப்படும் எனவும் பணி நிரந்தரம் செய்யப்படும், சம்பள உயர்வு வழங்கப்படும் என அறிவிப்பு ஒன்றை சட்டப்பேரவையில் அறிவித்தார்கள், அதற்கான எந்த நடவடிக்கையும் துறை அதிகாரிகள், மேற்கொள்ளப்படவில்லை. பல்வேறு அரசு துறைகளில் குறிப்பாக பொதுப்பணித்துறை, கே வி கே, பாப்ஸ்கோ, பாசிக், பிப்டிக்,பாண்லே, பல்வேறு அரசு கூட்டுறவு துறைகளில் பணியாற்றும் ஊழியர்கள், ரேஷன் கடை ஊழியர்கள், சட்டப்பேரவை ஊழியர்கள், வேளாண் கமிட்டி ஊழியர், சுகாதாரத் துறை காண்ட்ராக்ட் ஊழியர்கள் , சாராய ஆலை ஊழியர்கள், ரொட்டி பால் ஊழியர்கள்,
இப்படி பல துறைகளில் அரசு பணி என நம்பி 15 ஆண்டு காலமாக பணியாற்றியவர் பலர் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர் மேலும் பலருக்கு சம்பள உயர்வு பணி நிரந்தரம் செய்யவில்லை, இதனால் சுமார் 12, 000 க்கும் மேற்பட்ட புதுச்சேரி பூர்வ குடி வாக்காளர் குடும்பங்கள் இன்றைக்கு அரசு வேலையை நம்பி பலர் நல்ல தனியார் வேலை, சுயதொழிலை விட்டுவிட்டு மேற்கண்ட பணியில் அந்தந்த கட்சி ஆட்சி நடைபெறுகின்ற பொழுது அன்றைய அரசியல்வாதிகள், சட்டமன்ற உறுப்பினர்கள் அப்பொழுதைய அமைச்சர்கள் அப்பொழுதைய முதல்வர்கள் அதிகாரிகள் என சிபாரிசு மூலமாகவும், வேறு தவறான வழியிலும் அரசு வேலை என நம்பி சேர்ந்தனர் , இன்றைக்கு அவர்களின் எதிர்காலம் கேள்வி குறியாகி உள்ளது, அத்தனை குடும்பங்களும் இன்றைக்கு தனது வாழ்வாதாரத்தை இழந்து நடுரோட்டிற்கு வந்து தினந்தோறும் போராட்டக் களமாக புதுவை மாநிலம் மாறி உள்ளது, இந்த அரசாங்கம் நீதிமன்ற தீர்ப்பை காரணம் காட்டி அலைக்கழிக்கப்படுகிறார்கள், மத்தியிலும் ,மாநிலத்திலும் ஒரே ஆட்சி நடைபெறுகின்ற இந்த சூழலில் இவர்களுக்கு ஒன் டைம் விதிவிலக்காக , சிறப்பு சட்டம் திருத்தம் கொண்டு வந்து, அனைவருக்கும் பணி நிரந்தரம் பதவி உயர்வு சம்பள உயர்வு மீண்டும் வேலை வாய்ப்பு ஆகியவற்றை நடப்பு பட்ஜெட் கூட்டதோடரில் இந்த அரசு ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும்,
அதற்கு புதிதாக பொறுப்பேற்றுள்ள உச்ச அதிகாரம் கொண்ட மாண்புமிகு துணை ஆளுநர் அவர்கள் வழிவகைசெய்ய வேண்டும், இப்படி இவர்களுக்கு அரசு வேலைகள் உறுதி செய்தால் அத்தனை குடும்பங்களும் இந்த அரசாங்கத்திற்கு உறுதுணையாக இருப்பார்கள், என்பதையும் எங்கள் பாட்டாளி மக்கள் கட்சியும் இந்த அரசாங்க அமைவதற்கு கூட்டணியில் பணியாற்றினோம் என்ற காரணத்தாலும் இந்த கோரிக்கையை தாங்கள் மூலமாக வைக்கின்றோம். நிச்சயம் நிர்வாக திறன் கொண்ட தாங்கள் செய்து தருவீர்கள் என நம்புகிறோம் -என புதுச்சேரி மாநில பாமக அமைப்பாளர் கணபதி குறிப்பிட்டுள்ளார்.
English Summary
Special laws should be amended and jobs should be given to all... Insistence!