தைப்பூசம் திருவிழா - பழனிக்கு சிறப்பு ரெயில்கள் இயக்கம்.!  - Seithipunal
Seithipunal


திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள, பழநி தண்டாயுதபாணி திருக்கோயிலுக்கு தினந்தோறும் தமிழகம் முழுவதும் இருந்து ஏராளமான பக்தர்கள் வருகை தருகின்றனர். இந்த நிலையில், இந்தக் கோயிலில் ஜனவரி 25-ம் தேதியன்று தைப்பூச திருவிழா நடைபெற உள்ளது.

இதற்காக பயணிகளின் வசதிக்காக மதுரை - பழநி இடையே ஜனவரி 24 மற்றும் 25 உள்ளிட்ட நாட்களில் சிறப்பு ரயில் இயக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:- 

" பழநி தைப்பூசத் திருவிழாவை முன்னிட்டு மதுரையில் இருந்து பழனிக்கு சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகிறது. அதன்படி மதுரை - பழநி தைப்பூச சிறப்பு ரயில் (06722) குறிப்பிட்ட இரு நாட்களிலும் மதுரையிலிருந்து காலை 06.00 மணிக்கு புறப்பட்டு காலை 08.30 மணிக்கு பழனி சென்று சேரும்.

மறு மார்க்கத்தில் பழநி - மதுரை தைப்பூச சிறப்பு ரயில் (06721) பழநியில் இருந்து மாலை 05.45 மணிக்கு புறப்பட்டு இரவு 08.15 மணிக்கு மதுரை வந்து சேரும். இந்த சிறப்பு ரயில்கள் சோழவந்தான், கொடைக்கானல் ரோடு, அம்பாத்துரை, திண்டுக்கல், ஒட்டன்சத்திரம் ஆகிய ரயில் நிலையங்களில் நின்று செல்லும்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

special train run to palani temple for thaipoosam


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->