ராஜராஜ சோழன் ஆட்சியில் ஆன்மீகம் எழுச்சி பெற்றது! ஆளுநர் ஆர்.என் ரவி புகழாரம்! - Seithipunal
Seithipunal


தஞ்சை பெரிய கோவிலை கட்டிய ராஜராஜசோழனின் பிறந்தநாள் விழா ஒவ்வொரு ஆண்டும் ஐப்பசி மாதம் சதய நட்சத்திரத்தில் வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு மாமன்னன் ராஜராஜ சோழனின் 1037 ஆம் ஆண்டு சதய விழாவை முன்னிட்டு நேற்றும் இன்றும் பல்வேறு நிகழ்ச்சிகளுடன் கொண்டாடப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் ராஜராஜ சோழனின் சதவீதவை முன்னிட்டு தமிழக ஆளுநர் ரவி சார்பில் கவர்னர் மாளிகை அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அந்த அறிக்கையில் பேரரசர் ராஜ ராஜ சோழனின் பிறந்த நாளை முன்னிட்டு மக்கள் மையமாகக் கொண்டு கொள்கைகள் தொலைநோக்குப் பார்வை கொண்ட தலைமைத்துவம் நிர்வாகத்திறமை ஆகியவற்றுக்கு அவர் எப்போதும் உத்வேகமாக இருப்பார்கள். 

மேலும் அவரது ஆட்சியில் தமிழகம் ஆழ்ந்த ஆன்மீக பண்பாட்டு எழுச்சி பெற்றது என்பதை கவர்னர் ரவி நினைவு கூர்ந்தார்" என அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. இதேபோன்று முதல்வர் ஸ்டாலின் வெளியிட்ட அறிக்கையில் "தஞ்சை பெரிய கோயிலை கட்டுவித்த கலைத்திறமும் கலகண்ட போர்களில் எல்லா வெற்றி முரசும் கொட்டிய தினமும் உடைய மும்முடிச் சோழன் ராஜராஜனின் புகழ் வரலாற்று வானில் துருவ நட்சத்திரமாய் என்றும் மின்னும்! 

அரசர்க்கரசர் பிறந்த ஐப்பசி சதய நாள் இனிய ஆண்டுதோறும் அரசு விழா கொண்டாடப்படும்" என தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். ராஜராஜ சோழனை ஹிந்துவாக மாற்ற பாஜக முயற்சி செய்கிறது என திராவிட கட்சி நிர்வாகிகள் மற்றும் ஆதரவாளர்கள் குற்றம் சாட்டி வந்த நிலையில் ஆளுநர் ரவி ராஜராஜ சோழன் ஆட்சி காலத்தில் ஆன்மீகம் எழுச்சி பெற்றது என அறிக்கை வெளியிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Spirituality arose during reign of RajarajaChola RN Ravi


கருத்துக் கணிப்பு

தமிழகத்தின் கல்வித்தரம், கட்டமைப்பு வசதிகள் எப்படி இருக்கு?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தின் கல்வித்தரம், கட்டமைப்பு வசதிகள் எப்படி இருக்கு?




Seithipunal
--> -->