நடுக்கடலில் தாக்குதல் - அச்சத்தில் தமிழக மீனவர்கள்.! - Seithipunal
Seithipunal


ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள ராமேஸ்வரம் மீன்பிடி துறைமுகத்திலிருந்து நேற்று முன் தினம் 300 விசைப்படகுகளில் மீனவர்கள்  கடலுக்கு மீன்பிடிக்க சென்றனர். அதன் படி அவர்கள் நடுக்கடலில் மீன்பிடித்து கொண்டிருந்த போது ரோந்து கப்பலில் ரோந்து வந்த இலங்கை கடற்படையினர் மீன்பிடி படகுகளை நோக்கி சரமாரியாக கற்களை வீசி தாக்குதல் நடத்தினர். 

இந்தத் தாக்குதலால் அச்சமடைந்த மீனவர்கள் உயிரை பாதுகாத்துக்கொள்ள அவசர அவசரமாக படகுகளை வேறு பகுதிக்கு ஓட்டி சென்றனர். மேலும், மூன்று படகுகளில் மீன் வலைகளை மீனவர்கள் வெட்டி எறிந்துவிட்டு தப்பித்துச் சென்றனர். 

இரவு முழுவதும் கடலில் பதற்றத்துடன் மீன்பிடித்து இன்று காலை கரை திரும்பிய மீனவர்கள் சம்பவம் குறித்து தெரிவித்துள்ளதாவது, ‘இலங்கை கடற்படையின் நடவடிக்கையால் மீன்பிடி தொழில் செய்ய முடியவில்லை. 

நடுக்கடலில் மீன்பிடித்து கொண்டிருந்த போது, ரோந்து வந்த இலங்கை கடற்படையினர் கற்களை வீசி தாக்கினர். இதனால் சரியாக மீன்பிடிக்க முடியாமல் இன்று கரை திரும்பினோம். 

ஒரு படகிற்கு ரூ.20 ஆயிரம் முதல் ரூ.50 ஆயிரம் நஷ்டம் ஏற்பட்டுள்ளது’ என்றுத் தெரிவித்துள்ளனர். இலங்கை கடற்படையின் இந்த நடவடிக்கை மீனவர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

sri langan navy attack tamilnadu fishermans in sea


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->