காரைக்கால் மீனவர்கள் 14 பேரை விடுதலை செய்ய, ரூ.3.25 லட்சம் அபராதம்; இலங்கை நீதிபதி உத்தரவு..! - Seithipunal
Seithipunal


எல்லை தாண்டி மீன் பிடித்ததாக காரைக்கால் மீனவர்கள் 14 பேரை துப்பாக்கி முனையில் இலங்கை கடற்படை செய்திருந்தது. குறித்த 13 பேரும் சிறைக்காவல் முடிந்து மல்லாகம் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டனர். இந்நிலையில், இது தொடர்பாக விசாரணை நடத்திய இலங்கை நீதிபதி, ரூ.3.25 லட்சம் அபராதம் கட்டினால் காரைக்கால் மீனவர்கள் விடுதலை செய்யப்படுவார்கள் என்று உத்தரவிட்டுள்ளார்.

இலங்கை கடற்பரப்பில் அத்துமீறி நுழைந்து மீன் பிடியில் ஈடுபட்டதாக குறித்த 14 இந்திய மீனவர்கள் கடந்த வியாழக்கிழமை (06) இரவு கைது செய்யப்பட்டு, மன்னார் மாவட்ட கடற்தொழில் திணைக்கள அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.

இதனை தொடர்ந்து இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் காரியாலய அதிகாரிகள் மன்னாருக்கு வருகை தந்து குறித்த மீனவர்களை பார்வையிட்டதோடு, அவர்களுக்கு தேவையான உதவிகளை முன்னெடுத்தனர். குறித்த 14 மீனவர்களிடமும் நடந்த விசாரணைகளின் பின்னர் குறித்த மீனவர்களை மன்னார் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது. 

எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கூறி தமிழ்நாடு, புதுச்சேரியைச் சேர்ந்த மீனவர்கள் இலங்கை கடற்படையால் கைது செய்யப்படுவதும், இலங்கை மீனவர்கள் எல்லை தாண்டி மீன் பிடித்தனர் என இந்திய கடற்படை கைது செய்வதும் தொடர் கதையாகி வருகிறது. கைது செய்யப்படும் மீனவர்கள் சிறையில் அடைக்கப்படுவதுடன், அவர்களது படகுகள், மீன்கள், வலைகள் பறிமுதல் செய்யப்படுகின்றன. அதிகமான தொகை அபராதமும் விதிக்கப்படுகிறது.

இந்நிலையில், இலங்கை - இந்திய அரசு - தமிழக அரசு பேச்சுவார்த்தை நடத்தி இந்த பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காண வேண்டும் என்று மீனவர்கள் தரப்பில் கோரிக்கைகள் முன் வைத்து வருகின்றனர். இது ஒருபுறமிருக்க இலங்கையின் வடக்கு பகுதியில் வாழும் மீனவர்களின் வாழ்வாதாரம் தமிழ்நாடு மீனவர்கள் எல்லை தாண்டி மீன் பிடிப்பதால் நசுக்கப்படுகிறது என்று அந்நாட்டு அமைச்சர் பிமல் ரத்நாயக்க கூறியுள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Sri Lankan judge orders the release of 14 Karaikal fishermen a fine of Rs Three and a half lakh


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->