இலங்கை கடற்படை மீண்டும் அட்டூழியம் ...தமிழக மீனவர்கள் 11 பேர் கைது!
Sri Lankan Navy atrocity again 11 Tamil Nadu fishermen arrested
கடலுக்கு மீன் பிடிக்க சென்ற ராமேஸ்வரம் மீனவர்களை இலங்கை கடற்படை கைது செய்துள்ளது.அவர்கள் எல்லை தாண்டி மீன்பிடித்தாக கூறி 11 மீனவர்களை இலங்கை கடற்படை கைது செய்து,அவர்களது விசை படகுகளையும் எடுத்துசென்றுள்ளனர்.
தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்படை தொடர்ந்து தாக்குதல் நடத்திவருகிறது.எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி தமிழக மீனவர்களை ஒவ்வொரு முறையும் இலங்கை கடற்படை கைது செய்வதோடு அவர்களது படகுகளையும் எடுத்து சென்று விடுகின்றனர். இந்த சம்பவங்கள் தொடர்ந்து நடைபெற்று வருவதால் மீனவர்கள் தங்களுடைய எதிர்ப்புகளை தெரிவித்தனர்.
மேலும் மத்திய, மாநில அரசுகளை கண்டித்தும்,மீனவர் பிரச்சனைக்கு நிரந்தர தீர்வு காண நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி பல்வேறு கட்ட போராட்டங்களை நடத்தினர் மீனவர்கள். மீனவர்கள் பல்வேறு கட்ட போராட்டங்களை நடத்தியும் இதுவரை மத்திய, மாநில அரசு எந்த வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என மீனவர்கள் குற்றச்சாட்டு தெரிவிக்கின்றனர் .

இதனால் மீனவர்கள் அச்சத்துடன் கடலுக்கு சென்று வருகின்றனர். சமீப காலமாக தமிழக மீனவர்களை இலங்கை கடற்படை பிடித்து செல்வது அதிகரித்துக் கொண்டே செல்கிறது. இந்த நிலையில் கடலுக்கு மீன் பிடிக்க சென்ற ராமேஸ்வரம் மீனவர்களை இலங்கை கடற்படை கைது செய்துள்ளது.அவர்கள் எல்லை தாண்டி மீன்பிடித்தாக கூறி 11 மீனவர்களை இலங்கை கடற்படை கைது செய்து,அவர்களது விசை படகுகளையும் எடுத்துசென்றுள்ளனர்.இந்த சம்பவம் தமிழக மீனவர்களிடைய அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
English Summary
Sri Lankan Navy atrocity again 11 Tamil Nadu fishermen arrested