ராமேசுவர மீனவர்களை மீண்டும் விரட்டியடித்த இலங்கை கடற்படையினர்!
Sri Lankan Navy attack Rameswaram fishermen
ராமநாதபுரம், ராமேசுவரத்தில் இருந்து மீனவர்கள் ஒவ்வொரு முறையும் கடலுக்குச் செல்லும் போது அவர்களை இலங்கை கடற்படையினர் தாக்கி சிறை பிடிப்பதும், விரட்டி அடிப்பதும் தொடர்கதையாக உள்ளது.
இதனால் ராமேஸ்வரம் மீனவர்கள் மீன் பிடி தொழிலில் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். நேற்று ராமேஸ்வரத்தில் இருந்து 400க்கும் மேற்பட்ட விசைப்பலகைகளுடன் மீனவர்கள் கடலுக்குச் செல்ல மீன்வளத் துறையிடம் அனுமதி டோக்கன் பெற்றிருந்தது.
இந்நிலையில் நேற்று காலையில் மீனவர்கள் மீன் பிடிக்க சென்ற போது கச்சத்தீவு அருகே இலங்கை கடற்படையினர் ரோந்து கப்பல்களை நிறுத்தி கண்காணிப்பில் ஈடுபட்டு வந்தது தெரிய வந்தது.
இதுகுறித்து கடலுக்கு செல்ல தயாராக இருந்த மீனவர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதனால் 50 விசை படகுகளில் மட்டும் மீனவர்கள் கடலுக்குள் மீன் பிடிக்க சென்றனர்.
இதில் ஒரு தரப்பினர் கச்சத்தீவு அருகே இந்திய கடல் எல்லையை ஒட்டி வலைகளை விரித்து மீன் பிடித்துக் கொண்டிருந்தனர்.
அப்போது அங்கு வந்த இலங்கை கடற்படையினர் எல்லை தாண்டி வந்ததாக தெரிவித்து ராமேஸ்வரம் மீனவர்களை தாக்கி அவர்கள் விரித்த வலைகளை வெட்டி சேதப்படுத்தினர்.
இது குறித்து மீனவர்கள் தெரிவிக்கையில், இலங்கை கடற்படை தாக்குதல் கடந்த சில மாதங்களாக அதிகரித்துக் கொண்டே உள்ளது.
ஒவ்வொரு முறையும் கடலுக்கு செல்லும் போது ரூ. 25 ஆயிரம் முதல் ரூ. 50 ஆயிரம் வரை செலவு செய்கிறோம். இதனால் எங்களின் வாழ்வாதாரம் கடுமையாக பாதிக்கப்படுகிறது என வேதனையுடன் தெரிவித்தனர்.
English Summary
Sri Lankan Navy attack Rameswaram fishermen