தொடரும் அட்டூழியம்: இலங்கை கடற்படை மீது வேதாரண்யம் மீனவர்கள் புகார்! - Seithipunal
Seithipunal


கடந்த சில நாட்களாக புயல் காரணமாக மீனவர்கள் மீன் பிடிப்பதற்கு கடலுக்குள் செல்லாமல் இருந்ததால் அவர்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. 

பின்னர் மீன்வளத்துறை சார்பில் தடை விடுவிக்கப்பட்டிருந்ததால் மீனவர்கள் கடலுக்குள் மீன் பிடிக்கச் சென்றனர். 

நாகப்பட்டினம், வேதாரண்யம் பகுதியைச் சேர்ந்த பக்கிரி சாமி (வயது 40). இவருக்கு சொந்தமான பைபர் படகில் அதே பகுதியைச் சேர்ந்த 3 பேருடன் கோடியகரையில் தங்கி மீன் பிடித்து வருகின்றனர். 

இவர்கள் 3 பேரும் நேற்று மதியம் கோடியகரையில் இருந்து மீன் பிடிக்க சென்றபோது இலங்கை கடற்படை நள்ளிரவில் வந்து 15 கிலோ வலையை வெட்டியுள்ளனர். 

பின்னர் மீனவர்களை தாக்கி விரட்டிவிட்டு சென்றனர். பாதிக்கப்பட்ட மீனவர்கள் இன்று காலை 11 மணியளவில் கோடியகரைக்கு வந்து இது குறித்து வேதாரணியம் மீன்வளத்துறை அதிகாரிகளிடம் புகார் அளித்தனர். 

புகாரின் அடிப்படையில் மீன்வளத் துறை அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Srilankan navy detains Vedaranyam Fishermen 


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->