அனைத்து சாதியினருக்கும் சமமான இட ஒதுக்கீடு! ஆலோசனையில் இறங்கிய ஸ்டாலின்! - Seithipunal
Seithipunal


தமிழகத்தில் முன்னேறிய வகுப்பினர் அல்லாத பிற்படுத்தப்பட்டோர், பட்டியல் இனத்தவர், பழங்குடியினர், அருந்ததியர், முஸ்லிம்கள் என 69 சதவீத இட ஒதுக்கீடு நடைமுறையில் உள்ளது. இந்த நிலையில் கடந்த 2019 ஆம் ஆண்டு மத்திய பாஜக அரசு கொண்டுவந்த ஏழைகளுக்கான 10 சதவீதம் இட ஒதுக்கீடு செல்லும் என சமீபத்தில் உச்ச நீதிமன்றம் அறிவித்துள்ளது. இதுகுறித்து தமிழக முதல்வர் ஸ்டாலின் "10 சதவீத இட ஒதுக்கீடு செல்லும் என்ற தீர்ப்பு சமூக நீதிக்கான போராட்டத்தில் ஒரு பின்னடைவு" என கருத்து தெரிவித்திருந்தார். 

இதனைத் தொடர்ந்து கடந்த நவம்பர் 12ஆம் தேதி சட்டசபை அனைத்துக் கட்சி தலைவர்களின் கூட்டத்தை கூட்டி உச்சநீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து மறுசீராய்வு மனு தாக்கல் செய்வது தொடர்பாக ஆலோசனை நடத்தினார். ஆனால் பிராமணர் அல்லாத சைவ வேளாளர்கள், முதலியார்கள், செட்டியார்கள், ரெட்டியார்கள், நாயுடுகள் போன்ற 70க்கும் மேற்பட்ட சமூகத்தினர் 10 சதவீத இட ஒதுக்கீட்டின் கீழ் வருகின்றனர். இதன் காரணமாக இந்த சமூகங்களை சேர்ந்த முக்கிய அமைச்சர்கள் முதல்வர் ஸ்டாலினிடம் எதிர் வரும் பிரச்சனை குறித்து எடுத்துக் கூறியுள்ளனர்.

இந்த நிலையில் 1921 ஆம் ஆண்டு நீதி கட்சியின் ஆட்சியின் பொழுது பிரதிநிதித்துவ அரசாணை வெளியிடப்பட்டது. அந்த அரசாணையின்படி பிராமணர்கள், பிராமணர்கள் அல்லாத ஹிந்துக்கள், இந்திய கிறிஸ்தவர்கள், முஸ்லிம்கள், ஐரோப்பியர்கள், ஆங்கிலோ இந்தியர்கள் மற்றும் பிற வகுப்பினர் என ஏழாக பிரித்து இட ஒதுக்கீடு வழங்கப்பட்டது.

அதே நடைமுறையை பயன்படுத்தி தமிழகத்தில் பிராமணர்கள் உட்பட 69 சதவீத இட ஒதுக்கீட்டிற்குள் வராத அனைத்து சமுதாயங்களுக்கும் இட ஒதுக்கீட்டு வழங்கலாமா, அவ்வாறு இட ஒதுக்கீடு வழங்கினால் ஏற்படும் விளைவுகள் குறித்து முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை நடத்தியதாக தகவல் கசிந்துள்ளது.

அவ்வாறு அனைத்து சமுதாயங்களுக்கும் சமமான இட ஒதுக்கீடு வழங்கப்பட்டால் ஏழைகளுக்கான 10 சதவீத இட ஒதுக்கீடு என்பது தேவையற்றது என திமுக கருதுகிறது. ஏற்கனவே ஜார்க்கண்ட் மாநிலத்தில் 77 சதவீதமாகவும் சத்தீஸ்கரில் 81 சதவீதமாகவும் இட ஒதுக்கீடு உயர்த்தப்பட்டுள்ள நிலையில் ஸ்டாலினின் இந்த ஆலோசனை தமிழகத்தில் இட ஒதுக்கீடு உயர்த்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Stalin consult with senior executives to provide reservation for all castes


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->