மழை நீரில் மிதக்கும் ஸ்டாலினின் தொகுதி! தேங்கியுள்ள மழை நீரால் மக்கள் கடும் அவதி! - Seithipunal
Seithipunal


வடகிழக்கு பருவமழை காரணமாக சென்னையில் பல்வேறு பகுதிகளில் மழை நீர் தேங்கியுள்ளது. சாலையில் தேங்கியுள்ள மழை நீரால் வாகன ஓட்டிகளும் பொதுமக்களும் சிரமத்திற்கு உள்ளாகி உள்ளனர். போர்க்கால அடிப்படையில் சென்னையில் பல்வேறு சாலைகளில் தேங்கியுள்ள மழை நீரை மாநகராட்சி ஊழியர்கள் அகற்றி வருகின்றனர். சில நாட்களுக்கு முன்பு சென்னை மேயர் பிரியாவும் நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகனும் மழைநீர் வடிகால்வாய் ஆய்வின் போது 95 சதவீத பணிகள் நிறைவு பெற்று விட்டதாக அறிவித்தனர். 

சென்னை மாநகராட்சியின் மேயர் பிரியா நேற்று முன்தினம் நள்ளிரவு முதல் மழை நீர் வெளியேற்றும் பணிகளை அதிகாரிகளுடன் சேர்ந்து களத்தில் நின்று ஆய்வு செய்து வருகிறார். எவ்வளவு மழை நீர் தேங்கினாலும் அகற்றப்பட வேண்டும் என மண்டல அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார். இதனால் துரிதமாக செயல்பட்ட அதிகாரிகளும் பணியாளர்களும் மழை நீரை அப்புறப்படுத்தி வருகின்றனர். செய்தி ஊடகங்களில் சென்னையில் பல இடங்களில் மழை நீரை தேங்கவில்லை என செய்திகள் வெளியாகின.

ஆனால் பிரபல தேசிய செய்தி ஊடகமான ஏ.என்.ஐ (ANI) தற்போதைய தமிழக முதல்வர் ஸ்டாலினின் சொந்தத் தொகுதியான கொளத்தூரின் அவல நிலையை படம் பிடித்து காட்டியுள்ளது. கொளத்தூர் தொகுதியை பொருத்தவரை பெரும்பான்மையான பகுதிகளில் நீரில் மூழ்கியுள்ளது. கடந்த இரண்டு நாட்களாக பெய்த மழையின் காரணமாக தேங்கியுள்ள நீர் முதல்வர் ஸ்டாலின் தொகுதியிலேயே அகற்றப்படாதது வேதனை அளிப்பதாக பொதுமக்கள் தெரிவிக்கின்றனர்.

 சென்னை மழைநீர் வடிகால்வாய் பணிக்காக பல ஆயிரம் கோடி ரூபாய் செலவில் திராவிட மாடல் அரசு கொண்டு வந்த சென்னை 2.0 திட்டம் இதுதானா? தமிழக முதல்வர் ஸ்டாலினின் கொளத்தூர் தொகுதியே இவ்வாறாக மழைநீர் தேங்கியுள்ளது என்றால் மற்ற பகுதிகளில் எவ்வாறு இருக்கும் என்பதை யூகித்து பாருங்கள் என சமூக ஆர்வலர்கள் கேள்வி எழுப்புகின்றனர். கொளத்தூர் தொகுதியில் மழைநீர் தேங்கியுள்ளது தொடர்பான வீடியோ சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Stalins kolathur assembly constituency floating in rain water


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->