ராணிப்பேட்டை || மதுபானக் கடையில் திருட்டு - குற்றவாளிக்கு போலீசார் வலைவீச்சு.! - Seithipunal
Seithipunal


ராணிப்பேட்டை || மதுபானக் கடையில் திருட்டு - குற்றவாளிக்கு போலீசார் வலைவீச்சு.!

ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள வாலாஜாபேட்டை அடுத்த குடிமல்லூர் கிராமத்தில் அரசு மதுபானக்கடை ஒன்று செயல்பட்டு வருகிறது. வயல்வெளி பகுதியின்  நடுவே அமைந்துள்ள இந்த மதுபானக் கடையில் ஐயப்பன், என்பவர் பணிபுரிந்து வருகிறார்.

இவர் நேற்று இரவு வழக்கம்போல் 10 மணிக்கு மதுபானக் கடையை மூடிவிட்டு வீட்டிற்குச் சென்றுள்ளார். இதையடுத்து ஐயப்பன் இன்று காலை மதுபானக் கடையைத் திறப்பதற்காக வந்துள்ளார். அப்போது, மதுபானக் கடையை ஒட்டியுள்ள நிலத்தின் உரிமையாளர் டாஸ்மாக் கடையின் முன்பக்க பூட்டை உடைத்து இருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தார். 

உடனே ஐயப்பன் சம்பவம் குறித்து மதுபானக் கடையின் சூப்பர்வைசர் நரசிம்மனுக்குத் தகவல் தெரிவித்தார். அந்த தகவலின் படி கடைக்கு வந்த அவர் கடையில் சோதனை செய்தப்போது, கடையில் உள்ளே இருந்த சிசிடிவி கேமிரா, அதனுடன் இருக்கும் மெமரி கார்டு கல்லாபெட்டி மற்றும் 20 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான விலை உயர்ந்த மதுபானங்கள் ஆகியவை திருடுபோனது தெரிய வந்தது.

இதைப்பார்த்து அதிர்ச்சி அடைந்த அவர் சம்பவம் தொடர்பாக போலீஸாருக்குத் தகவல் தெரிவித்தார். அதன் படி அவர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து, திருடு போயிருக்கும் கடையைப் பார்வையிட்டு வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

steal in liquar shop at ranipetai


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->