தடுத்து நிறுத்துங்கள்!... உச்ச நீதிமன்றத்தில் சைவ உணவு மட்டும் விநியோகம்? - கி.வீரமணி கடும் கண்டனம்! - Seithipunal
Seithipunal


சென்னை பெரியார் திடலில் திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி தலைமையில் நடைபெற்ற தலைமை செயற்குழு கூட்டத்தில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

*ஈரோட்டில் தமிழின சமுதாயத்தில் மிகப்பெரிய எழுச்சியையும், மாற்றத்தையும், வெற்றியையும் உருவாக்கிய சுயமரியாதை இயக்கத்தின் நூற்றாண்டு விழாவை நவம்பர் 26-ம் தேதி சிறப்புடன் நடத்துவது.

*தமிழின மீனவர்களின் மீதான துயரம் தொடராமல் இருக்க, உறுதியான நடவடிக்கைகளை ஒன்றிய அரசு மேற்கொள்ள வேண்டும் என்றும், இந்த பிரச்சனைக்கு அனைத்துக் கட்சிக் கூட்டத்தை கூட்டி, உரிய முடிவினை மேற்கொள்ள  ஒருமனதாக தமிழ்நாடு அரசைக் கேட்டுக்கொள்கிறது.'

*விஸ்வகர்மா யோஜனா' என்ற பெயரில் ஒன்றிய அரசு திணிக்கும் குலக்கல்வித் திட்டத்தைத் தமிழ்நாடு அரசு நிராகரித்திருப்பது வரவேற்கத்தக்கது.

'நவராத்திரி விழா' என்கிற பெயரில் ஒன்பது நாட்களுக்கு உச்சநீதிமன்ற உணவகத்தில் சைவ உணவு மட்டுமே வழங்கப்படும் என்றும், பூண்டு, வெங்காயம் இல்லாத உணவு மட்டுமே வழங்கப்படும் என்றும் உச்சநீதிமன்ற உணவகத்தின் நிர்வாகத்திற்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனை தடுத்து நிறுத்துமாறு சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதிக்கு இச்செயற்குழு வேண்டுகோள் விடுக்கிறது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Stop it vegetarian only distribution in supreme court k veeramani condemnation


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->