ஓட்டுநர்கள் மற்றும் நடத்துநர்கள் மது அருந்திவிட்டு பேருந்து இயக்கினால் கடுமையான ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் - போக்குவரத்துத்துறை எச்சரிக்கை - Seithipunal
Seithipunal


ஓட்டுநர்கள் மற்றும் நடத்துநர்கள் மது அருந்திவிட்டு பேருந்து இயக்குவது கண்டறியப்பட்டால் கடுமையான ஒழுங்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று போக்குவரத்துத்துறை தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக தமிழக அரசின் விரைவுப் போக்குவரத்துக் கழகம், அனைத்து பணிமனைகளுக்கும் அனுப்பியுள்ள சுற்றறிக்கையில்,

சமீப காலமாக நமது கழக ஓட்டுநர்கள் மற்றும் ஓட்டுநர் உடன் நடத்துநர்களில் சிலர் தங்களது பணியின் பொழுது மது அருந்திய நிலையில் பணிபுரிவதாக புகார் பெறப்படுகிறது. மது அருந்திய நிலையில் பணிபுரிவது சட்டப்படி குற்றமாகும். 

மது அருந்திய நிலையில் பணிகளிடையே போக்குவரத்திற்கு அவப்பெயர் ஏற்படுவதுடன், பணிகளுக்கு நமது கழகத்தின் மீதான நம்பிக்கை குறைவதுடன், தொடர்ந்து நமது கழக போக்குவரத்துகளில் பயணிப்பதை தவிர்க்க வாய்ப்பு உள்ளது.

எனவே, அனைத்து ஓட்டுநர்கள் மற்றும் ஓட்டுநர் உடன் நடத்துனர்கள் பணியின் பொழுது மது அருந்திய நிலையில் பணிபுரியக்கூடாது. அவ்வாறு பணியின் பொழுது மது அருந்திய நிலையில் பணி புரிவது கண்டறியப்பட்டால் காவல்துறை மூலம் நடவடிக்கை எடுக்க வாய்ப்பு மிக அதிக அளவில் உள்ளது.

நமது கழகத்தில் மது அருந்திய நிலையில் பணியில் கண்டறியப்பட்டால் மிகக் கடுமையான ஒழுங்கு நடவடிக்கை (அடிப்படை சம்பளம் குறைப்பு, பணி நீக்கம்) எடுக்கப்படும். எனவே பணியாளர்கள் மேற்படி குற்றத்திற்கான பின் விளைவுகளை அறிந்து பணியில் ஒழுங்கீனத்திற்கு இடம் கொடுக்காமல் பணிபுரிய வேண்டும் என அறிவுறுத்தியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Strict action will be taken if drivers and conductors operate buses after drinking alcohol


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->