மாந்தீரக பூஜை செய்ய வந்த கல்லூரி மாணவி தற்கொலை.. காவல்துறை விசாரணை..! - Seithipunal
Seithipunal


பரிகாரம் செய்ய கோவிலுக்கு சென்ற மாணவி தற்கொலை செய்துகொண்ட சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

திருவள்ளூர் மாவட்டம், கொமக்கமேடு பகுதியை சேர்ந்தவர் ஹேமமாலினி (20). அங்குள்ள தனியார் கல்லூரி ஒன்றில் மூன்றாமாண்டு படித்து வருகிறார். சில மாதங்களாக  ஆவிதொல்லையால் அவருக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதனால் ஊத்துக்கோட்டை அருகே உள்ள  பிலாத்து கோட்டை கிராமத்தில் உள்ள கோவில் ஒன்றுக்கு அழைத்துச் சென்றுள்ளனர்.

கோயில் பூசாரி முனுசாமி அவரது மனைவியுடன் தங்கி பூஜை செய்து வந்துள்ளார். இந்நிலையில் ஹேமமாலினி தனது பெரியம்மா மற்றும் தந்தையுடன் கோவிலுக்கு சென்று பூஜையில் ஈடுபட்டுள்ளார்.

பூஜை முடிந்ததும் மற்றும் அவரது தங்கை பூசாரி என் அறையில் படுத்து உறங்கி உள்ளனர். பெரியம்மா கோவில் மண்டபத்தில் தூங்கி கொண்டு இருந்தார். இந்நிலையில் அதிகாலை ஹேமமாலினி விஷம் குடித்து உயிருக்கு போராடிக் கொண்டிருந்த நிலையை கண்ட பூசாரிகள் மனைவி அவரது பெரியம்மாவை எழுப்பி விஷயத்தை கூறியுள்ளார்.

இரண்டு மணி நேரம் கழித்து உயிருக்கு போராடிக் கொண்டிருந்த ஹேமமாலினி அருகில் இருக்கும் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லாமல் தனியார் மருத்துவமனை ஒன்றுக்குக் கொண்டு சென்றுள்ளனர்.

இதனையடுத்து, மேல் சிகிச்சைக்காக திருவள்ளூர் அரசு கொண்டு வந்தனர். சிகிச்சை பலனளிக்காமல் பரிதாபமாக உயிரிழந்தார்ம். சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தலைமறைவாக உள்ள கோயில் பூசாரி முனுசாமியை தேடி வருகின்றனர்.

உடல்நலக் குறைவால் அழைத்து செல்லப்பட்ட மாணவி எதற்காக தற்கொலை செய்து கொண்டார் என்பது குறித்து காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Student Commited Suicide In Thiruvallur


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->