மரத்தடியில் அமர்ந்து படிக்கும் மாணவர்கள் - இடவசதி இல்லாத அவலம்.! - Seithipunal
Seithipunal


கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள, பொள்ளாச்சி, ஆர்.கோபாலபுரம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி கடந்த, 2021ம் ஆண்டு உயர்நிலைப் பள்ளியாக தரம் உயர்த்தப்பட்டது. இருப்பினும், கட்டட வசதியில்லை. இரண்டு கட்டடங்களில் ஐந்து வகுப்பறையுடன் செயல்படும் இந்தத் தொடக்கப்பள்ளியில், மொத்தம் 119 மாணவர்கள் படிக்கின்றனர்.

இதே பள்ளி வளாகத்தில் தனி கட்டட வசதியில்லாததால் உயர்நிலைப் பள்ளி, இரண்டு கட்டடங்களில் உள்ள, மூன்று வகுப்பறைகளில் செயல்படுகிறது. இங்கு ஆறு முதல், 10ம் வகுப்பு வரை, 175 மாணவர்கள் படிக்கின்றனர். மொத்தம் மூன்று வகுப்பறைகளில், 10ம் வகுப்பு மாணவர்களுக்கு ஒரு வகுப்பறையும், ஒன்பதாம் வகுப்பு, தலைமையாசிரியர், அலுவலக அறையும், 8ம் வகுப்பு மற்றும் ஆசிரியர் அறையுடன் ஒரு வகுப்பறையும் உள்ளன. ஆறு மற்றும், ஏழாம் வகுப்புக்கு வராண்டாவில் வகுப்புகள் செயல்படுகின்றன.

இதனால், பள்ளி வராண்டாவில், வெயில் நேரத்தில் மரத்தடி நிழலிலும், மாலை நேரத்தில் தண்ணீர் தொட்டி அருகிலும் மாணவர்களுக்கு வகுப்புகள் எடுக்கப்படுகின்றன. இந்தப் பள்ளி கேரள மாநில எல்லையில் அமைந்துள்ளதால், அங்கு பெய்து வரும் மழையினால், மாணவர்களுக்கு கல்வி கற்பிப்பதில் இடையூறு ஏற்படக்கூடாது என்பதற்காக, வகுப்பறை முன் உள்ள வராண்டாவில் தார்ப்பாய் கட்டப்பட்டுள்ளது.

இடவசதி இல்லாத காரணத்தால் மாணவர்கள் ஒருவரையொருவர் ஒட்டி அமர வைத்தும், பள்ளி வளாகத்தில் அமர வைக்கும் அவல நிலை நீடிக்கிறது. தற்போது மழை காலத்தில் மாணவர்களுக்கு கல்வி கற்பிக்க ஆசிரியர்கள் படாதபாடு படுகின்றனர். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

students sit under the tree for no class rooms in r gobalapuram pollachi


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->