மழை, குளிர் - பழனிக்கு வரும் பக்தர்களுக்கு சுக்கு காபி.! - Seithipunal
Seithipunal


முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் மூன்றாம் படைவீடான பழனி தண்டாயுதபாணி சுவாமி கோவிலுக்கு தினந்தோறும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்து வருகின்றனர். அதிலும் தற்போது சபரிமலை சீசனாக இருப்பதால் வழக்கத்தை விட வெளி மாநிலங்களில் இருந்தும் அதிக அளவு பக்தர்கள் வருகை தருகின்றனர்.

தினமும் அதிகாலை 4.30 மணி முதல் படிப்பாதை, யானைப்பாதை வழியாக பக்தர்கள் மலைக்கோவிலுக்கு சென்றவண்ணம் உள்ளனர். அப்படி வரும் பக்தர்களுக்கு களைப்பு தெரியாமல் இருக்க பழனி தேவஸ்தானம் சார்பில் காலை 8 மணி முதல் மாலை 3 மணி வரை மோர் கொடுக்கப்பட்டு வந்தது.

தற்போது மழை மற்றும் கடும் குளிர் நிலவுவதால் மோருக்கு பதிலாக சுடச்சுட சுக்கு காப்பி இலவசமாக வழங்கப்படுகிறது. அதாவது, மலைக்கோவிலுக்கு செல்லும் வழியில் இடும்பன் கோவில் அருகே தினமும் காலை 5 மணி முதல் பகல் 1 மணி வரை சுக்கு காப்பி வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இந்த சுக்கு காபி தினந்தோறும் 5 ஆயிரம் பக்தர்களுக்கும், தேவைக்கேற்ப கூடுதலாக வழங்கவும் திட்டமிடப்பட்டுள்ளது. இதேபோல் மலைக்கோவிலில் தினமும் காலை முதல் இரவு வரை மூன்று வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு இலவசமாக பால் வழங்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

sukku coffee provide to devotees in palani temple


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->