கோடை விடுமுறை நிறைவு! இன்று முதல் சென்னை உயர் நீதிமன்றம் செயல்படும்! - Seithipunal
Seithipunal


வெயிலின் தாக்கம் காரணமாக சென்னை உயர்நீதிமன்றத்திற்கு விடுமுறை அளிக்கப்பட்டது. ஒரு மாத காலகோட விடுமுறை நேற்றுடன் முடிந்த நிலையில் சென்னை உயர்நீதிமன்றத்தில் இன்று முதல் பணிகள் தொடங்கியுள்ளது.

காலநிலை மாற்றத்தில் நாடுமுழுவதும் வெயிலின் தாக்கம் அதிகரித்து காணப்பட்டது. அதுவும் குறிப்பாக ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் கத்திரி வெயில் தொடங்கும் முன்னே வெயிலின் தாக்கம் அதிகரித்து நாடுமுழுவதும் வெப்ப அலை வீச தொடங்கியது. வருடமுழுவதும் செயல்படும் நீதிமன்றங்களுக்கு மே மாதம் விடுமுறை வழங்கப்படுவது வழக்கம்.

ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் இருந்தே மே மாதம் கோடை விடுமுறையாக சென்னை மற்றும் உயர் நீதிமன்றம் மதுரை கிளைக்கு விடுமுறை அளிக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் மே இரண்டாம் தேதி முதல் ஜூன் இரண்டாம் தேதி வரை சென்னை உயர் நீதிமன்றம் மற்றும் உயர் நீதிமன்றம் மதுரை கிளைக்கு கோடை விடுமுறை அளிக்கப்பட்டது.

சென்னை உயர் நீதிமன்றம் மற்றும் உயர் நீதிமன்றம் மதுரை கிளை ஆகிய நீதிமன்றங்களுக்கு கோடை விடுமுறை விடப்பட்டாலும் அவசர வகைகளை விசாரிப்பதற்கு வாரம் ஒரு நீதிபதி என அவசரவாதிகள் விசாரிக்கப்பட்டு வந்தன.

இந்த நிலையில் கோடை விடுமுறை நேற்றுடன் நிலைவடைந்த நிலையில், அதனை எடுத்து ஒரு மாத கால கோடை விடுமுறைக்கு பின் சென்னை நீதிமன்றம் மற்றும் உயர் நீதிமன்ற மதுரை கிளை மீண்டும் முழு அளவில் இன்று முதல் செயல்படும் என்று தகவல் வெளியாகி உள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Summer vacation is over Madras High Court will function from today


கருத்துக் கணிப்பு

சென்னையில் ஃபார்முலா கார் ரேஸ் தேவைதானா?



Advertisement

கருத்துக் கணிப்பு

சென்னையில் ஃபார்முலா கார் ரேஸ் தேவைதானா?




Seithipunal
--> -->