சித்ரா பௌர்ணமி.. கன்னியாகுமரியில் ஒரே நேரத்தில் சூரியன், சந்திரனின் அபூர்வ காட்சி.! - Seithipunal
Seithipunal


சித்ரா பௌர்ணமியை முன்னிட்டு கன்னியாகுமரியில் மக்கள் அதிகளவில் கூடுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

சித்திரை மாதம் வரும் பவுர்ணமி சித்ரா பௌர்ணமி என்று அழைக்கப்பட்டு வருகிறது. அதன்படி இந்த ஆண்டு சித்ரா பவுர்ணமி நாளை மறுநாள் சனிக்கிழமை வருகிறது. அன்று மாலை 6 மணிக்கு கன்னியாகுமரி கடலில் சூரியன் மறையும் போது சந்திரன் உதயமாகிறது.

இந்த இரண்டு காட்சிகளும் ஒரே நேரத்தில் நடைபெறுகிறது. இந்த அபூர்வ காட்சியை காண்பதற்கு கன்னியாகுமரியில் சுற்றுலா பயணிகள் அதிகமாக வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் மேற்கு பக்கம் அரபிக் கடலில் சூரியன் மறையும், அதே நேரத்தில் கிழக்குப்பக்கம் வங்கக் கடலில் சந்திரன் உதயமாகும். இந்த அபூர்வ காட்சியை கன்னியாகுமரி முக்கடல் சங்கத்திலும், சன்செட் பாயிண்ட் போன்ற இடங்களிலும் சென்று கண்டு ரசிக்கலாம்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Sun and moon same time show in chithra full moon


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->