சூப்பர்!!! மலிவு விலை மருந்தகங்கள்! முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் திறப்பு....
Super Affordable pharmacies Chief Minister MK Stalin open ceremony
தமிழகம் முழுவதும் மலிவான விலையில் மருந்துகள் கிடைக்கும் வகையில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் 1000 இடங்களில் முதல்வர் மருந்தகத்தைத் இன்று திறந்து வைத்தார். கடந்த 15.8.2024 ஆம் அன்று சுதந்திரத் தின விழா உரையின்போது அறிக்கை ஒன்றைத் தெரிவித்திருந்தார். அதில், மலிவு விலையில் (ஜெனரிக்) மருந்து மாத்திரைகளையும், பிற மருந்துகளையும் பொதுமக்களுக்குக் கிடைக்கச் செய்யும் வகையில் முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் 1000 முதல்வர் மருந்தகங்கள் துவங்கப்படும் என்று தெரிவித்திருந்தார்.

முதல்வர் மருந்தகத் திட்டம்:
இந்தத் திட்டத்தைச் சிறப்பாக செயல்படுத்துவது தொடர்பாக முதலமைச்சர் தலைமையில் ஆய்வு கூட்டம் கடந்த 29.10.24 அன்று நடைபெற்றது. அந்தக் கூட்டதில் முதல்வர் மருந்தகங்கள் அமைக்கக் கூட்டுறவுத் துறை மற்றும் தமிழ்நாடு மருத்துவ சேவைக் கழகத்தைச் சேர்ந்தவர்களுக்கு மேற்கொள்ளப்பட்ட பணிகள்,மாவட்டம் மருந்து சேமிப்பு கிடங்குகள் அமைத்தல் உள்ளிட்ட ஏற்பாடுகள் குறித்து உரிய அறிவுரைகளை வழங்கினார்.மேலும் மக்கள் மருந்தகம் அமைப்பதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வந்த நிலையில் கூட்டுறவுத் துறைக்கு 2000-க்கும் மேற்பட்ட விண்ணப்பங்கள் வந்திருந்தன.
கூட்டுறவுத் துறை:
அதில் தகுதியான மனுக்கள் தேர்வு செய்யப்பட்டதையடுத்து அவர்களுக்குக் கடைகளும் இப்போது ஒதுக்கப்பட்டுள்ளது. மேலும் இதில் தொழில் முனைவோருக்கு 500 கடைகளும், கூட்டுறவுத் துறைச் சார்பில் 500 கடைகளும் ஒதுக்கப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து சர்க்கரை நோயைக் கட்டுப்படுத்த விற்பனைச் செய்யப்படும் 30 மாத்திரைகள் கொண்ட ஒரு அட்டை வெளி மார்க்கெட்டில் ரூ.70 இருக்கும்,இது முதல்வர் மருந்தகத்தில் ரூ.11 கிடைக்கிறது. பிரதமர் பெயரிலான மக்கள் மருந்தகத்தில் இது ரூ.30 விற்கப்படுகிறது. மேலும் தனியார் மருந்து கடைகளில் மருந்து மாத்திரைக்காக மட்டும் மாதம் ரூபாய் 3000 முதல் 4000 வரைச் செலவழித்தவர்கள் இனிமேல் முதல்வர் மருந்தகத்தில் 1000 ரூபாய் இருந்தால் இந்த மருந்துகளை வாங்க முடியும், அதாவது மாதந்தோறும் 50% முதல் 70% சேமிக்க முடியும்.
762 மருந்து வகைகள்:
மேலும் ஏசி வசதியுடன் அமைக்கப்பட்டுள்ள இந்த மருந்தகங்களில் ஜெனரிக் மருந்துகள், ஆயுர்வேத யுனானி, சர்ஜிகல் சித்தா மற்றும் பிற மருந்துகள் குறைந்த விலையில் கிடைக்கும். இந்த மலிவு விலை மருந்தகத்தை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று சென்னைப் பாண்டி பஜாரில் திறந்து வைத்து விற்பனையைத் தொடங்கி வைத்தார். அதன் பிறகு அவர் கோட்டூர்புரம் நூலகத்திற்குச் சென்று ஒவ்வொரு மாவட்டத்திலும் அமைக்கப்பட்டுள்ள மருந்தகங்களைக் காணொளி வாயிலாகத் திறந்து வைத்தார். இதில் மருத்துவம் சார்ந்த இதர மருத்துவ உபகரணங்கள் சித்தா, இம்காப்ஸ், ஆயுர்வேதம், டாம்கால் மற்றும் யுனானி மருந்துகள், சர்ஜிகல் மற்றும் நியூட்ரா ஜீட்டிக்கல்ஸ் உள்ளிட்ட மருந்து வகைகள் தமிழ்நாடு நுகர்வோர் கூட்டுறவு இணையத்தால் கொள்முதல் செய்து மருந்தாக உங்களுக்கு வழங்கப்பட உள்ளது.இதில் மொத்தம் 762 மருந்து வகைகள் அறுவைச் சிகிச்சைக்கான மருந்துகள் இங்கு கிடைக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து சென்னையில் 39 முதல்வர் மருந்தகம் இன்று துவங்கப்பட்டுள்ளது.
English Summary
Super Affordable pharmacies Chief Minister MK Stalin open ceremony