அர்ச்சகர் நியமனத்திற்கு இடைகால தடைக்கோரிய மனு.. தடைவிதிக்க மறுத்த உச்சநீதிமன்றம்..! - Seithipunal
Seithipunal


தமிழகத்தில் உள்ள கோவில்களில் அர்ச்சகர்கள், பூசாரிகள், பரம்பரை அரங்காவலர்கள் நியமனம் மற்றும் பணி நிபந்தனை தொடர்பாக இந்து சமய அறநிலையத்துறை புதிய பணி விதிகள் 2020ம் ஆண்டு கொண்டுவரப்பட்டது. இதில், 18 வயது முதல், 35 வயதுடையவர்கள் மட்டுமே அர்ச்சகராக இருக்க முடியும் எனவும் ஓராண்டு பயிற்சி முடித்திருப்பது கட்டாயம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை எதிர்த்து அகில இந்திய சிவாச்சாரியார்கள் சோவா சங்கத்தினர் வழக்கு தொடத்திருந்தார்.

அதே போல சிறுவாஞ்சூர் மதுரகாளியம்மன் பூசாரிகளும் வழக்கு தொடர்ந்தனர்.  புதிய விதிகள் மரபிற்கு எதிராக இருப்பதாகவும் மரபுக்கு மாறாக வயது நிர்ணயிப்பது சட்டவிரோதமானது என தெரிவித்தனர். மரபு படி நியமன நடைபெற வேண்டும் எனவும் புதிய விதிமுறைகள் செல்லாது என அறிவிக்க வேண்டும் எனவும் அந்த மனுவில் தெரிவித்திருந்தனர்.

தமிழ்நாட்டில் இந்து சமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டிலுள்ள கோயில்களில் அர்ச்சகர்கள் நியமனம் தொடர்பாக அரசுக்கு இடைக்கால தடை விதிக்க கோரி மனுவை விசாரித்த உச்சநீதிமன்றம் தற்போது இடைக்கால தடை விதிக்க முடியாது எனவும் இந்த மனு தொடர்பாக தமிழ்நாடு அரசு பதிலளிக்கவும்  உத்தரவிட்டு இந்த வழக்கை செப்டம்பர் மாத்திற்கு ஒத்திவைத்துள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Superme Court Says the arsakar case


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->