நளினி, ரவிச்சந்திரன் நாளை விடுதலையா? முக்கிய தீர்ப்பை வழங்கப் போகும் உச்ச நீதிமன்றம்! - Seithipunal
Seithipunal


ஏழு தமிழர்கள் விடுதலை என்பதே தமிழக அரசின் நிலைப்பாடு!

இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி படுகொலை வழக்கில் சாந்தன், முருகன், பேரறிவாளன், நளினி உள்ளிட்ட 26 பேருக்கு 1998-ம் ஆண்டு பூவிருந்தவல்லி தடா நீதிமன்றம் தூக்கு தண்டனை விதித்து. இந்த தீர்ப்புக்கு எதிராக சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த மேல்முறையீட்டில் சாந்தன், முருகன், நளினி, பேரறிவாளனுக்கு மட்டும் தூக்கு தண்டனை உறுதி செய்யப்பட்டது. பின்னர் 2000-ம் ஆண்டு கருணையின் அடிப்படையில் நளினியின் தூக்கு தண்டனை ஆயுள் தண்டனையாக குறைக்கப்பட்டது. நீண்ட வருடங்களாக சிறைவாசம் அனுபவிப்பதால் தூக்கு தண்டனையை ஆயுள் தண்டனையாக குறைக்க கோரி உச்ச நீதிமன்றத்தில் சாந்தன், முருகன், பேரறிவாளன் சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம் 2014-ம் ஆண்டு பேரறிவாளன், சாந்தன், முருகனின் தூக்கு தண்டனை ரத்து செய்யப்பட்டு ஆயுள் தண்டனையாக குறைத்தது.

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை அனுபவிக்கும் 7 தமிழரை விடுதலை செய்ய வேண்டும் என்பது தமிழக அரசின் நிலைப்பாடு. தமிழக சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு குடியரசுத் தலைவருக்கும் அனுப்பி வைக்கப்பட்டது. ஆனால் சிபிஐ விசாரித்த வழக்கில் மாநில அரசு எந்த முடிவும் எடுக்கக் கூடாது. மேலும் ஏழு பேர் விடுதலை தொடர்பான வழக்கில் மத்திய அரசுக்குதான் அதிகாரம் உண்டு என வாதம் முன்வைக்கப்பட்டது. ராஜீவ் காந்தி படுகொலை வழக்கில் தம்மை விடுதலை செய்ய வேண்டும் என்று 2016-ல் பேரறிவாளன் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம் கடந்த மே 18-ந் தேதி அரசியல் சாசனத்தின் 142-வது பிரிவின் கீழ் உச்சநீதிமன்றம் தமக்கான சிறப்பு அதிகாரத்தின் கீழ் பேரறிவாளனை விடுதலை செய்தது.

பேரறிவாளனை விடுதலை செய்த இத்தீர்ப்பின் அடிப்படையில் ராஜீவ் காந்தி படுகொலை வழக்கில் ஆயுள் தண்டனை அனுபவித்து வரும் தங்களையும் விடுதலை செய்யக் கோரி ரவிச்சந்திரன், நளினி ஆகியோர் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்தனர். ஆனால் சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்ததால் உச்சநீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்தனர். இந்த வழக்கில் தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் பதில் மனுத் தாக்கல் செய்தது. அந்த மனுவில் 7 தமிழர் விடுதலை தொடர்பான தமிழக அரசின் நிலைப்பாடு மற்றும் விடுதலை தொடர்பான தீர்மானங்களை ஜனாதிபதிக்கு அனுப்பியுள்ளோம். ஆனால் அந்த தீர்மானங்களை  கிடப்பில் போட்டிருப்பது உள்ளிட்டவை சுட்டிக்காட்டி உள்ளனர்.

பேரறிவாளனை அரசியல் சாசன பிரிவு-142 பயன்படுத்தி உச்ச நீதிமன்றம் தமக்கான சிறப்பு அதிகாரத்தின் கீழ் விடுதலை செய்தது போல நளினி மற்றும் ரவிச்சந்திரனை விடுதலை செய்யப்படுவார்களா என்பது நாளை தெரியவரும்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Supreme Court is going to give an important decision on Nalini and Ravichandran released tomorrow


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->