பெரும் சோகம்.... நகைச்சுவை நடிகர் வைகை புயல் வடிவேலுவின் தாயார் காலமானார்...!! - Seithipunal
Seithipunal


நகைச்சுவை நடிகர் வடிவேலுவின் தாயார் வைத்தீஸ்வரி உடல் நலக்குறைவால் இன்று காலமானார். தமிழ் திரையுலகில் தனி முத்திரை பதித்தவரும் வைகைப்புயல் என அழைக்கப்படும் வடிவேலு மதுரையில் பிறந்தவர். இவருக்கென தனி ரசிகர் பட்டாளமே உள்ளது. கடந்த 1988ல் என் தங்கை கல்யாணி படத்தின் மூலம் மிகச் சிறிய கதாபாத்திரத்தில் அறிமுகமான வடிவேலு படிப்படியாக முன்னேறி தற்பொழுது தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத நகைச்சுவை நடிகராக வலம் வருகிறார். 

இந்த நிலையில் நடிகர் வடிவேலுவின் தாயார் வைத்தீஸ்வரி வயது மூப்பு காரணமாக உடல் நலம் குன்றி இருந்த நிலையில் நேற்று இரவு திடீரென காலமானார். நடிகர் வடிவேலுவின் தாயார் மறைவு குடும்பத்தினர் மத்தியில் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. வடிவேலுவின் தாயார் மறைவிற்கு திரைத்துறையினர் மற்றும் பொதுமக்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Tamil comedy actor Vadivelu mother passes away


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->