இனிமேல் அடையாளங்களையும் மறைக்க முற்பட்டால் சரியாக இருக்காது! - தமிழிசை சௌந்தர்ராஜன் எச்சரிக்கை! - Seithipunal
Seithipunal


தமிழ் மன்னர்கள் கடவுளை வணங்கி விட்டே அரசாட்சி செய்தனர்!

கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த புதுச்சேரி ஆளுநர் டாக்டர் தமிழிசை சௌந்தர்ராஜன் செய்தியாளர்களின் பல்வேறு கேள்விக்கு பதில் அளித்தார்.

அப்பொழுது செய்தியாளர் ஒருவர் ராஜராஜன் சோழன் இந்து என திணிப்பதாகவும் அவருடைய காலத்தில் சைவம் வைணவம் சமயங்கள் மட்டுமே இருந்ததாக இயக்குனர் வெற்றிமாறன் தெரிவித்தது கருத்துக்கு நடிகர் கமலஹாசன் ஆதரவு அளித்திருந்தது பற்றி கேள்வி எழுப்பினார்.

அதற்கு பதில் அளித்த தமிழிசை சௌந்தராஜன் "நான் தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரியில் மருத்துவம் படித்தேன். தஞ்சை பெரிய கோவிலை பார்த்து ஒவ்வொரு நாளும் பிரமித்துள்ளேன். ராஜ ராஜ சோழனின்  உருவமும் அவர் அணிந்திருந்த திருநீறும் திலகமும் என் கண்முன்னே நிற்கிறது. இதில் அவருடைய அடையாளங்களை மறைக்க பார்க்கிறார்கள். நெடுங்காலமாக தமிழகத்தில் கலாச்சார அடையாளங்கள் மறைக்கப்பட்டு வருகின்றன. 

தமிழர்களின் கலாச்சார அடையாளங்களை மறைப்பதற்கு அனைவரும் சேர்ந்து குரல் கொடுக்க வேண்டும் என்பதே எனது கருத்து. ஏற்கனவே பல அடையாளங்களை மறைத்து விட்டனர். இந்து என்பது ஒரு கலாச்சார அடையாளம். தேவைக்கு ஏற்றார் போல் கலாச்சாரத்தை மாற்றிக் கொள்வது ஒத்துக் கொள்ள முடியாது. தமிழகத்தை போன்று பிற மாநிலங்களில் கோயில்கள் உள்ளது என நிரூபிக்க முடியுமா என சவால் விடுகிறேன். தமிழர்களின் அடையாளம் இறை வழிபாடு. சிவனையும் பெருமாளையும் வணங்கியவர்கள் அவர்களுக்கு கோவில் கட்டி வழிபட்டனர். 

சைவமும் வைணவமும் இந்து மதத்தின் அடையாளங்கள். இனி மேலும் அடையாளங்களை மறைக்க முற்பட்டால் சரியாக இருக்காது. இறை வழிபாட்டில் நம்பிக்கை கொண்ட சேர, சோழ, பாண்டிய, பல்லவ மன்னர்களின் இறை வழிபாட்டில் இருந்து அரசாங்கம் அவர்களை வேறுபடுத்தி காட்டியதில்லை. எல்லா இடங்களிலும் அவர்கள் இறைவனை வணங்கிவிட்டு தான் அரசாட்சி செய்தனர். எனவே இனிமேல் அடையாளங்களை மறைக்க முற்பட்டால் சரியாக இருக்காது" என தனது பேட்டியை முடித்துக் கொண்டு புறப்பட்டுச் சென்றார். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Tamil kings ruled after worshiping God by tamilisai soundararajan


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->