#BREAKING || TNPSC தலைவர் ஆகிறார் தமிழக டிஜிபி சைலேந்திரபாபு..!! - Seithipunal
Seithipunal


தமிழக டிஜிபியாக தற்போது பணியாற்றி வரும் சைலேந்திரபாபு கடந்த 1987 ஆம் ஆண்டு தனது ஐபிஎஸ் பணியை தொடங்கினார். இவர் வரும் ஜூன் 30-ம் தேதியுடன் தனது பணியில் இருந்து ஓய்வு பெறுகிறார். இந்த நிலையில் தமிழக அரசு பணியாளர்கள் தேர்வு ஆணையத்தின் தலைவர் பொறுப்பு கடந்த ஓராண்டாக நிரப்பப்படாமல் செயல்பட்டு வருகிறது. டிஎன்பிசி தலைவராக இருந்த பாலச்சந்திரன் கடந்த ஆண்டு ஜூன் மாதத்தோடு ஓய்வு பெற்றார்.

தற்பொழுது டிஎன்பிஎஸ்சி ஆணையத்தின் உறுப்பினராக இருக்கும் ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரி முனியநாதன் பொறுப்பு தலைவராக இருந்து வருகிறார். இந்த நிலையில் வரும் ஜூலை 1-ம் தேதி முதல் டிஎன்பிஎஸ்சி தலைவராக தற்போதைய தமிழக டிஜிபி சைலேந்திரபாபு நியமிக்கப்படலாம் என்ற தகவல் வெளியாகி உள்ளது. இதற்கான கோப்புகள் இறுதி செய்யும் பணி தற்பொழுது நிறைவடைந்துள்ளதாகவும் தெரியவந்துள்ளது.

தமிழக அரசின் உயர்மட்ட குழுவில் இது குறித்து ஆலோசனை நடத்தப்பட்டு அதற்கான ஒப்புதலும் வழங்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் டிஎன்பிஎஸ்சி தலைவராக சைலேந்திரபாபு நியமனம் செய்வதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு ஆளுநர் மாளிகை மூலம் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

தற்பொழுது 61 வயதில் தமிழ்நாடு டிஜிபியாக பணி ஓய்வு பெறும் சைலேந்திரபாபு அடுத்த ஓராண்டுக்கு, அதாவது 2024 ஆண்டு ஜூன் மாதம் வரை டிஎன்பிஎஸ்சி தலைவராக நீடிப்பார். ஏற்கனவே அதிமுக ஆட்சியில் காவல்துறை அதிகாரியாக இருந்த நடராஜன் ஐபிஎஸ் டிஎன்பிஎஸ்சி தலைவர் பதவியில் இருந்துள்ளார் என்பதை குறிப்பிடத்தக்கது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Tamil Nadu DGP Syilendrababu becomes TNPSC Chairman


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->