இங்கு யாரும் பண்ணையார் ஆகவில்லை..விஜய்க்கு டிகேஎஸ் இளங்கோவன் பதிலடி!
No one is a farmer here. TKS Elangovan hits back at Vijay
இந்தி திணிப்பை திமுக பன்னெடுங்காலமாக எதிர்த்து வருகிறது என்றும் விஜய்யின் அரசியல் அறிவு அவ்வளவுதான் என்றும் திமுகவில் யாரும் பண்ணையார் ஆகவில்லை என்றும் சிறை செல்ல தயாராக இருக்கிறோம் என டிகேஎஸ் இளங்கோவன் கூறினார்.
தமிழக வெற்றிக் கழகம் 2ம் ஆண்டு தொடக்க விழா சென்னை மாமல்லபுரம் பூஞ்சேரி பகுதியிலுள்ள தனியார் சொகுசு விடுதியில் நடைபெற்றது. அப்போது இந்த விழாவில் பேசிய தவெக தலைவர் விஜய், ஆளும் திமுக அரசையும், மத்திய அரசசையும் கடுமையாக விமர்சித்து இருந்தார்.மேலும் முன்பு பண்ணையார்கள் பதவியில் இருப்பார்கள் என்றும் இப்போது பதவியில் இருப்பவர்கள் பண்ணையார்களாக மாறிவிடுகிறார்கள் என்றும் நமது கட்சி பண்ணையார்களுக்கான கட்சி அல்ல என்று கடுமையாக விமர்சனம் செய்தார் விஜய்.
இந்தநிலையில் விஜய்க்கு பதிலடி கொடுக்கும் விதமாக திமுக செய்தித்தொடர்பு செயலாளர் டி.கே.எஸ்.இளங்கோவன் செய்தியாளர்களிடம் கூறியதாவது:-இந்தி திணிப்பை திமுக பன்னெடுங்காலமாக எதிர்த்து வருகிறது என்றும் விஜய்யின் அரசியல் அறிவு அவ்வளவுதான் என்றும் திமுகவில் யாரும் பண்ணையார் ஆகவில்லை என்றும் சிறை செல்ல தயாராக இருக்கிறோம் என கூறினார்.
மேலும் நாங்கள் வீட்டுக்குள் இருப்பவர்கள் அல்ல என்றும் களத்தில் இருப்பவர்கள் என்றும் கூறிய டி.கே.எஸ்.இளங்கோவன் 1938-ம் ஆண்டு சென்னை மாகாணத்தில் நீதி கட்சி ஆட்சி போய் காங்கிரஸ் கட்சி ஆட்சிக்கு வந்தபோது இந்திமொழி திணிக்கப்பட்டது என்றும் அப்போதே அன்றைக்கு தமிழ் அறிஞர்கள் அனைவரும் இந்திக்கு எதிராக திராவிட கழக தலைவர்கள் அனைவரும் இந்திக்கு எதிராக போராட்டத்தை நடத்தி திருச்சியில் இருந்து சென்னை வரை நடந்தே வந்து மக்களிடம் கருத்தை பரப்பினார்கள் இதையெல்லாம் விஜய்க்கு தெரியாது என கூறினார்
மேலும் 1965-ம் ஆண்டு பல பேர் இந்தி எதிர்ப்புக்காக மாணவர்கள் சுட்டுக்கொல்லபட்டனர் என்றும் பல பேர் இந்தி எதிர்ப்பை எதிர்த்து உடலில் தீ வைத்துக்கொண்டு மாண்டார்கள் என்றும் இந்தி திணிப்பை எதிர்த்து வேகமாக போராடிய கட்சி திமுக என்றும் இந்திக்காக தலைவர்கள் சிறைவாசம் இருந்தார்கள் என பேசியடி.கே.எஸ்.இளங்கோவன் அண்ணாவாக இருக்கட்டும் கலைஞராக இருக்கட்டும் திமுகவின் மூத்த தலைவர்கள் சிறைவாசம் அனுபவித்தார்கள் என்றும் 1968-ம் ஆண்டு ஆட்சியை பிடித்தபோது அண்ணா அவர்கள் தமிழ்நாட்டில் இருமொழிக்கொள்கைதான் என சட்டம் கொண்டு வந்தார் என தெரிவித்தார்.
தனக்கு அரசியல் புரிதல் இல்லை என அவரே வெளிக்காட்டிக் கொள்கிறார் என்றும் எந்தமொழிக்கும் நாங்கள் எதிரி அல்ல, இந்தி திணிப்பைத்தான் எதிர்க்கிறோம் என்றும் தேர்தல் பற்றி கூட நாங்கள் கவலைபட்டதில்லை. வெற்றி தோல்விக்கூட கவலைபடுபவர்கள் இல்லை. மக்களுக்காக, கொள்கைக்காக மக்கள் நலனுக்காக போராட வேண்டும் தொடர்ந்து போராடி வருகிற கட்சி திமுக என்றும் தொகுதி மறுசீரமைப்பு விவகாரத்தில் பாஜக சொல்வது ஒன்று; செய்வது ஒன்று.என டி.கே.எஸ்.இளங்கோவன்இவ்வாறு அவர் கூறினார்.
English Summary
No one is a farmer here. TKS Elangovan hits back at Vijay