தமிழகத்தின் இறுதி வாக்காளர் பட்டியல் இன்று வெளியீடு..!!
Tamil Nadu final voter list release today
தமிழகத்தின் வாக்காளர் பட்டியல் திருத்தும் பணி கடந்த நவம்பர் 9ஆம் தேதி துவங்கி டிசம்பர் 9ஆம் தேதி வரை நடைபெற்றது. இந்த பணியின் போது வாக்காளர்கள் தங்கள் பெயரை சேர்த்தல், நீக்குதல், திருத்தம் மேற்கொள்ளுதல், முகவரி மாற்றம் போன்றவற்றிற்கு விண்ணப்பங்கள் பெறப்பட்டன. இதற்காக தமிழகம் முழுவதும் நான்கு நாட்கள் சிறப்பு முகாம் நடைபெற்றது.
அதன்படி டிசம்பர் 9ஆம் தேதி வரை பெயர் சேர்க்க 10.34 விண்ணப்பங்களும், பெயர் நீக்க 7.9 லட்சம் விண்ணப்பங்களும், திருத்தம் செய்ய 4.79 லட்சம் விண்ணப்பங்களும் பெறப்பட்டன. அவற்றில் தகுதியான விண்ணப்பங்கள் ஏற்கப்பட்டு ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டது. பொதுமக்களிடம் இருந்து பெறப்பட்ட விண்ணப்பங்கள் அடிப்படையில் திருத்தம் மேற்கொள்ளப்பட்டது. இந்த நிலையில் தமிழகத்தின் இறுதி வாக்காளர் பட்டியல் தற்போது தயாராகியுள்ளது. திட்டமிட்டபடி தமிழகம் முழுவதும் இன்று காலை 10 மணியளவில் அனைத்து மாவட்டங்களின் ஆட்சியர்கள் மற்றும் சென்னை மாநகராட்சி கமிஷனர் ஆகியோர் இறுதி வாக்காளர் பட்டியலை வெளியிட உள்ளனர்.
English Summary
Tamil Nadu final voter list release today