வலையில் சிக்கிய இலங்கைப் படகு... தீவிர விசாரணையில் போலீசார்! பரபரப்பில் தமிழக மீனவர்கள்.! - Seithipunal
Seithipunal


நாகப்பட்டினம், வேதாரண்யம் அருகே ஆளில்லா இலங்கை படகு ஒன்று இன்று கரை ஒதுங்கியது மீனவர்கள் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

வேதாரண்யம், சிறுதலை காடு மீனவ கிராமத்தைச் சேர்ந்த ராமானுஜம் உள்ளிட்ட 8 மீனவர்கள் அந்த பகுதி கடலோரத்தில் மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது அவர்களது வலையில் கவிழ்ந்த நிலையில் இருந்த ஒரு படகு சிக்கி உள்ளது. 

பின்னர் படகினை கடலில் இருந்து கட்டி இழுத்து இன்று அதிகாலை வேதாரண்யம் கடற்கரைக்கு கொண்டு சேர்க்கப்பட்டுள்ளது. பின்னர் இது குறித்து கடலோர காவல் குழும போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. 

தகவல் அறிந்த வேதாரண்ய கடலோர காவல் குழும போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று இலங்கை படகை கைப்பற்றி தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

ஆளில்லா இலங்கை படகு ஒன்று வேதாரண்யம் அருகே கரை ஒதுங்கியுள்ளது தமிழக மீனவர்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Tamil Nadu fishermen net caught Sri Lankan boat 


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->