தமிழக அரசுக்கு கடும் நெருக்கடி - பீதியை கிளப்பும் ஆளுநர் ஆர்என் ரவி! - Seithipunal
Seithipunal


கள்ளக்குறிச்சி சம்பவத்தில் உண்மையான குற்றவாளிகள் கண்டறியப்பட்டனரா? என்று, தமிழக அரசுக்கு, ஆளுநர் ஆர்.என்.ரவி கேள்வி எழுப்பியுள்ளார்.

கள்ளக்குறிச்சி கள்ளச்சாராயம் விவகாரத்தில் 58க்கும் மேற்பட்டோர் பலியான நிலையில், கள்ளச்சாராயம் குடித்த 100க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

மேலும், கள்ளச்சாராயம் குடித்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த 20 பேர் சிகிச்சை முடிந்து உடல்நலம் தேறி வீடு திரும்பி உள்ளனர்.

இந்த சம்பவத்தை பொறுத்தவரை ஆளும் தமிழர் திமுக அரசு அலட்சியம் செய்ததன் காரணமாகவே இத்தனை பேர் உயிரிழக்க நேரிட்டதாகவும், தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் தனது பதிவையே ராஜினாமா செய்ய வேண்டும் என்று பாமக, அதிமுக, பாஜக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் போர்க்கொடி தூக்கி உள்ளன.

இந்த நிலையில், கள்ளக்குறிச்சி சம்பவத்தில் உண்மையான குற்றவாளிகள் கண்டறியப்பட்டனரா என்று, தமிழக அரசுக்கு தமிழக ஆளுநர் எழுப்பி உள்ளார். 

மேலும், கள்ளக்குறிச்சியில் நடைபெற்ற இந்த சம்பவம் ஒரு இருண்ட நிகழ்வு என்றும், போதைப் பொருளுக்கு இளைஞர்கள் அடிமையாக ஆவதன் மூலம் நம் நாட்டின் எதிர்காலம் பாதிக்கப்படுவதாகவும் ஆளுநர் ரவி வேதனை தெரிவித்துள்ளார். 

மேலும் போதை பொருளால் எவ்வளவு பெரிய பாதிப்பு ஏற்படும் என்பதை நம் நாடு பார்த்துள்ளது. அதற்கு எடுத்துக்காட்டு பஞ்சாப் மாநிலம் தான். நான் தமிழக வந்த நாள் முதல் பெற்றோர்கள் தமிழகத்தில் போதை பொருள் நடமாட்டத்தை தடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி வருகின்றனர்.

தமிழகத்தில் உள்ள பெற்றோர்கள் Synthetic drugs உள்ளது என கூறுகின்றனர். அவர்களுக்கு தெரிவது இங்கு உள்ள அதிகாரிகளுக்கு எப்படி தெரியாமல் உள்ளது என்றும் ஆளுநர் கேள்வி எழுப்பியுள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Tamil Nadu governor candom to TN government kallakurichi kallacharayyam


கருத்துக் கணிப்பு

தமிழகத்தின் கல்வித்தரம், கட்டமைப்பு வசதிகள் எப்படி இருக்கு?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தின் கல்வித்தரம், கட்டமைப்பு வசதிகள் எப்படி இருக்கு?




Seithipunal
--> -->