நாட்டை வலிமைப்படுத்த அதிக சக்தி வாய்ந்த என்ஜின் ஆக தமிழ்நாடு திகழ்கிறது - அமைச்சர் டி.ஆர்.பி ராஜா! - Seithipunal
Seithipunal


1100 க்கும் மேற்பட்ட பொறியாளர்கள்,மருத்துவர்களை தமிழ்நாடு உருவாக்குயுள்ளது என அமைச்சர் டி.ஆர்.பி ராஜா தெரிவித்துள்ளார்.

துபாய்-யில் ஒரு நிகழ்வில் UAE பொருளாதர அமைச்சரை சந்தித்த போது அவரை சென்னைக்கு அழைத்து ஒரு முதலீட்டாளர் மாநாடு நடத்த வேண்டும் என முதலமைச்சர் அறிவுறுத்தி இருந்தார். அதன்படி இன்று இந்த மாநாடு நடைபெற்றது. அதில் அமைச்சர் டி.ஆர்.பி ராஜா தெரிவித்ததாவது,

நாட்டை வலிமைப்படுத்த அதிக சக்தி வாய்ந்த என்ஜின் ஆக தமிழ்நாடு திகழ்கிறது.1100 க்கும் மேற்பட்ட பொறியாளர்கள்,மருத்துவர்களை தமிழ்நாடு உருவாக்குகிறது.

மூன்றாவது முறையாக இந்தியாவில் ஐக்கிய அரபு அமீரக நாட்டு உடனான இது போன்ற சந்திப்பு நடைபெறுகிறது. இந்தியாவிலேயே தமிழ்நாடு சிறந்த காலணிகளை உருவாக்கும் தொழில் நிறுவனங்களை கொண்டுள்ளது.

1800 ஆண்டுகளுக்கு முன்பே இந்தியா ஐக்கிய அரபு அமீரக நாடுகளுக்கு இடையேயான வணிகம் தென் இந்தியாவில் இருந்து தொடங்கி உள்ளது. தமிழகத்தில் இருந்து 30% சதவீத எலக்ட்ரானிக் சாதனங்கள் ஏற்றுமதி செய்யப்படுகிறது.

நிறைய புதிய நிறுவனங்கள் தமிழ்நாட்டில் தொழில் தொடங்கி வருகின்றனர். இந்த மாநாட்டின் மூலம் நிறைய நல்ல முடிவுகள் வெளிவரும் என்று எதிர்பார்க்கிறேன்.தமிழ்நாடு திறமை,அறிவின் தலைநகரமாக விளங்குகிறது.

தொழில் தொடங்க தேவையான அனைத்து வசதிகளும் தமிழ்நாட்டில் உள்ளது. வேளாண் உற்பத்தியில் சிறப்பாக செயல்படும் தமிழகம், மதிப்பு கூட்ட பொருட்களாக மாற்றுவதில்லை என்று தெரிவித்தார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Tamil Nadu is becoming a powerful engine to strengthen the country Minister TRP Raja


கருத்துக் கணிப்பு

இந்த கனமழையை தமிழக அரசு எதிர்கொண்ட விதம்...!



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்த கனமழையை தமிழக அரசு எதிர்கொண்ட விதம்...!




Seithipunal
--> -->