தமிழ்நாடு கபடி அணி: தேர்வாகியுள்ள அரசு பள்ளி மாணவர்!  - Seithipunal
Seithipunal


திண்டுக்கல், நத்தம் அருகே உள்ள சமுத்திராபட்டியில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் தீபக் என்ற மாணவர் எட்டாம் வகுப்பு படித்து வருகிறார்.

இவர் மாவட்ட மண்டல அளவிலான பல்வேறு கபடி போட்டிகளில் பங்கேற்று வெற்றி பெற்று அதன் மூலம் ஏராளமான பரிசுகளும், பதக்கங்களையும், சான்றிதழ்களையும் பெற்றுள்ளார். 

இந்நிலையில் இந்திய பள்ளிகளுக்கான விளையாட்டு குழுமம் சார்பில் 2023-2024 ஆண்டிற்கான தேசிய அளவிலான கபடி போட்டி விரைவில் நடைபெற உள்ளது. 

இந்த விளையாட்டு போட்டியில் தமிழ்நாடு அணி சார்பில் கலந்து கொள்ளும் 14 வயது உட்பட்ட ஆண்கள் பிரிவு அணிக்கு வீரர்கள் தேர்வு, கரூர் ஸ்ரீ அன்னை வித்யாலயா மெட்ரிக் பள்ளியில் நடைபெற்றது. 

இந்த தேர்வில் மாணவர் தீபக் கலந்து கொண்டு வெற்றி பெற்றதன் மூலம் அவர் 14 வயதுக்குட்பட்டோருக்கான தமிழ்நாடு அணிக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளார். 

கரூர் முதன்மை மாவட்ட உடற்கல்வி ஆய்வாளர் இதற்கான சான்றிதழை மாணவரிடம் வழங்கினார். இதனைத் தொடர்ந்து தமிழ்நாடு அணிக்கு தேர்வு செய்யப்பட்ட மாணவர் தீபக்கிற்கு பள்ளி தலைமை ஆசிரியர், ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் ஊர் பொதுமக்கள் என அனைவரும் பாராட்டு தெரிவித்து வருகின்றனர். மேலும் 2024 ஆம் ஆண்டு நடைபெறும் தேசிய அளவில் கபடி போட்டியில் தீபக் பங்கேற்க உள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Tamil Nadu Kabaddi Team Selected Government School Student


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->