மூன்று மாவட்டங்களுக்கு குறி! ஆட்டத்தை ஆரம்பித்த தமிழக காவல்துறை! உத்தரவிட்ட தமிழக அரசு! - Seithipunal
Seithipunal


பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு பிறகு, தமிழகத்தின் சட்ட ஒழுங்கு நிலைநாட்ட தமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலின் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார்.

குறிப்பாக சென்னை காவல் ஆணையரை இடமாற்றம் செய்து அதிரடி நடவடிக்கை மேற்கொண்டுள்ளார். மேலும் தமிழக முழுவதும் 18 ஐபிஎஸ் அதிகாரிகளை இடமாற்றம் செய்தும் நடவடிக்கை மேற்கொண்டுள்ளார்.

இந்த நிலையில், தமிழகத்தில் கூலிப்படை கலாச்சாரத்தை அழிப்பதற்கு உண்டான நடவடிக்கையை தமிழக காவல்துறை, தமிழக அரசு மேற்கொண்டுள்ளது.

அதன்படி திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி ஆகிய தென் மாவட்டங்களில் உள்ள ரவுடிகளின் பட்டியலை தயாரிக்க தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. 

 

தமிழக அரசின் உத்தரவின் பெயரில் இந்த மூன்று மாவட்டங்களை சேர்ந்த 400 ரவுடிகளின் மீது நடவடிக்கை எடுக்க போலீசார் அவர்களை கண்காணித்து வருவதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

மேலும் தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் கூலிப்படையினர் மற்றும் ரௌடிகளை கண்காணிக்கவும் தமிழக அரசு உத்தரவு பிறப்பித்து உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Tamil Nadu police and government action against rowdys


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->