தமிழகத்தில்,இரண்டாம் கட்ட குரூப் "டி" தேர்வு..! - Seithipunal
Seithipunal


கடந்த 2019-ம் ஆண்டு இந்திய ரெயில்வே ஆட்சேர்ப்பு வாரியம் சார்பில், அறிவிக்கப்பட்ட 1 லட்சத்து 3 ஆயிரத்து 769 காலியிடங்களை நிரப்புவதற்கு குரூப் 'டி' தேர்வு தற்போது மூன்று கட்டமாக நடத்தப்படுகிறது. இந்த தேர்வில், முதல்கட்ட தேர்வு கடந்த மாதம் நிறைவடைந்ததையடுத்து இரண்டாம் கட்ட தேர்வு வடமத்திய ரெயில்வே (அலகாபாத்), வடமேற்கு ரெயில்வே (ஜெய்ப்பூர்). தென்கிழக்கு ரெயில்வே (கொல்கத்தா) மற்றும் மேற்கு மத்திய ரெயில்வே (ஜபல்பூர்) தென்கிழக்கு மத்திய ரெயில்வே (பிலாஸ்பூர்),  இடங்களுக்கு 2-வது கட்ட தேர்வு கடந்த 26-ந் தேதி தொடங்கியுள்ளது. 2-ம் கட்ட தேர்வு வருகிற 8-ந்தேதியுடன் முடிவடைகின்றன. 
 
அதனை தொடர்ந்து, மூன்றாவது கட்ட தேர்வு வரும் 8-ந் தேதி முதல் 19-ந் தேதி வரை, தெற்கு ரெயில்வே (சென்னை), வடக்கு ரெயில்வே (டெல்லி), வடகிழக்கு எல்லை ரெயில்வே (கவுகாத்தி), கிழக்கு கடற்கரை ரெயில்வே (புவனேஸ்வர்) ஆகியவற்றுக்கு நடத்தப்படுகிறது. இந்த தேர்வுக்கான ஹால்டிக்கெட் தேர்வுக்கு 4 நாட்களுக்கு முன்பு வெளியிடப்படும். 

தற்போது தேர்வு மையங்கள் குறித்த விவரங்கள் வெளியாகியுள்ளது. விண்ணப்பங்களில் உள்ள இமெயில் முகவரிக்கு இவை அனுப்பப்பட்டுள்ளது. இதில் உள்ள லிங்கில் கிளிக் செய்து, பதிவு எண், பிறந்த தேதி கொடுத்து தேர்வு மைய விபரங்களை தெரிந்துகொள்ளலாம்.

அவற்றில் தேர்வர் பெயர், தந்தை பெயர், வகுப்பு, தேர்வு நடைபெறும் இடம், தேர்வு தேதி, ஷிப்ட் உள்ளிட்டவைகள் இடம் பெற்றுள்ளன.  1½ மணி நேரம் குரூப் டி தேர்வு கணினி அடிப்படையில் காலை, மதியம், மாலை என மூன்று கட்டமாக நடக்கிறது. முதல் ஷிப்ட்-க்கு காலை 7.30 மணி முதல் 8.30 மணிக்குள் தேர்வு மையத்துக்குள் சென்று விட வேண்டும். 9 மணிக்கு தேர்வு தொடங்குகிறது. 

100 கேள்விகள் கேள்வித்தாளில் இடம்பெற்றிருக்கும். தேர்வு 1½ மணி நேரம் நடைபெறும்.  மாற்றுத்திறனாளிகளுக்கு தேர்வு நேரம் 2 மணி நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது. 2-வது ஷிப்ட் தேர்வு மையத்துக்கு வர வேண்டிய நேரம் 11.15-12.15 மணி ஆகும். 12.45 மணிக்கு தேர்வு ஆரம்பமாகும். 3-வது ஷிப்ட் தேர்வுக்கு 3.30-4.30 மணிக்குள் வந்து விட வேண்டும். 5 மணிக்கு தேர்வு தொடங்கும். 

இதில், விண்ணப்பதாரர்கள் பலருக்கு வெளி மாவட்டங்களில் தேர்வு மையம் ஒதுக்கப்பட்டுள்ளது. அந்த வகையில், மதுரை, சேலம், கோவை, சென்னை உள்ளிட்ட இடங்கள் ஒதுக்கப்பட்டு உள்ளது. ஆதார் அட்டை விண்ணப்பதாரர்கள் ஆதாரில் இணைக்கப்பட்ட பயோமெட்ரிக் முறையில் பரிசோதிக்கப்பட்டு தேர்வு மையத்துக்குள் அனுமதிக்கப்படுவார்கள். ஆகவே விண்ணப்பதாரர்கள் தங்கள் ஆவணங்களுடைய அசல் ஆதார் அட்டை கொண்டு வர வேண்டும் என ரெயில்வே தேர்வு வாரியம் கேட்டுக்கொண்டுள்ளது.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Tamil Nadu second phase of Group "D" exam


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->