வரி வசூலில் புதிய சாதனை படைத்த தமிழகம்! பெருமை கொண்ட பத்திர பதிவுத்துறை அமைச்சர்! - Seithipunal
Seithipunal


இந்தியாவில் வணிகவரி வசூலில் நான்காம் இடம் பிடித்த தமிழகம்!

தமிழ்நாடு வணிகவரி மற்றும் பத்திரப்பதிவுத்துறை சார்பாக அறிக்கை ஒன்றை அமைச்சர் மூர்த்தி வெளியிட்டுள்ளார்.

அந்த அறிக்கையில் கூறியதாவது "வணிகவரித்துறையில் தொடர்ச்சியாக நடந்து நடத்தப்பட்ட வரும் பல்வேறு ஆய்வுக் கூட்டங்கள் மற்றும் சோதனைகளை தொடர்ந்து வரிவருவாய் அதிகமாகிக் கொண்டே வருகிறது. 01.04.2022 முதல் 30.09.2022 வரையிலான காலகட்டத்தில் வசூலிக்கப்பட்ட வரி வருவாய் ரூ.66,161 கோடி ஆகும்.

கடந்த வருடத்தில் இதே நாளில் நீங்க கொள்கைகள் மட்டும் வரியானது ரூ.47,873 கோடி. கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு ரூ.18,288 கோடி அதிகமாக வசதியாக உள்ளது. இதேபோல் உத்திரப்பதிவியிலும் பல்வேறு சீர்திருத்த நடவடிக்கைகளின் விளைவாக இதுவரை இல்லாத அளவிற்கு வரி வசூல் சாதனை படைத்துள்ளது. செப்டம்பர் மாதம் மட்டும் வரி வசூல் ரூ.1,610 கோடியை தாண்டி உள்ளது.

01.04.2022 முதல் 30.09.2022 வரையிலான காலகட்டத்தில் பதிவான ஆணவங்களில் எண்ணிக்கை 17,56,977 ஆகும். பத்திர பதிவுத்துறை வசூலிக்கப்பட்ட மொத்த வருவாய் ரூ.8,696 கோடி ஆகும். இந்த வரி வசூல் கடந்த ஆண்டில் இதே காலகட்டத்தில் விட ரூ.2,488 கோடி ரூபாய் அதிகமாக ஈட்டப்பட்டுள்ளது.

இந்த வகையில் வணிகவரித்துறையும் பத்திர பதிவுத்துறையும் சேர்ந்து கடந்த ஆண்டு விட ரூ.20,776 கோடி ரூபாய் அதிகமாக வசூல் செய்து சாதனை படைத்துள்ளது. இத்தனை நாள் இந்தியாவில் வணிகவரி வசூலில் தமிழகத்திற்கு நான்காம் இடம் கிடைத்துள்ளது அவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஏற்கனவே சென்னை மாநகராட்சி வரி வசூலில் புதிய சாதனையை நோக்கி சென்று கொண்டிருக்கும் நிலையில் தற்போது இந்திய அளவில் வணிகவரித்துறை மற்றும் பத்திர பதிவுத்துறை நான்காம் இடத்திற்கு முன்னேறி சாதனை படைத்துள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Tamil Nadu set a new record in tax collection


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->