தமிழ் மொழியை வழக்காடும் மொழியாக அறிவிக்க வேண்டும் - முதலமைச்சர் மு.க ஸ்டாலின்.!
tamil should be declared as language of litigation in chennai hc chief minister mk stalin request
இன்று மதுரை மாவட்ட நீதிமன்ற வளாகத்தில் கூடுதல் கட்டிடங்கள் கட்டப்படுவதற்கான அடிக்கல் நாட்டு விழாவும், மயிலாடுதுறை மாவட்ட நீதிமன்றம் மற்றும் செசன்சு நீதிமன்றத்தின் தொடக்க விழா நடைபெற்றது.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமை தாங்கிய இந்த விழாவில், உச்சநீதிமன்றத்தின் தலைமை நீதிபதி சந்திரசூட் கலந்து கொண்டு மதுரை மாவட்ட நீதிமன்றத்தின் கூடுதல் கட்டிடத்திற்கு அடிக்கல் நாட்டினார்.
மேலும், இந்த விழாவிற்கு தலைமை தாங்கிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மயிலாடுதுறை மாவட்ட நீதிமன்றம் மற்றும் செசன்சு நீதிமன்றங்களை காணொளி கட்சி மூலம் தொடங்கி வைத்தார்.
இதைத் தொடர்ந்து, இந்த நிகழ்ச்சில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது, "நீதித்துறை உள்கட்டமைப்பிற்காக திமுக அரசு தொலைநோக்கு சிந்தனையுடன் செயல்படுகிறது. நீதிபதிகள் நியமனம் செய்வதில் சமூக நீதி பின்பற்றப்பட வேண்டும். உச்சநீதிமன்றத்தின் கிளையை சென்னையில் தொடங்க வேண்டும்.
சென்னை, உயர்நீதிமன்றத்தில் தமிழ் மொழியை வழக்காடும் மொழியாக அறிவிக்க வேண்டும். தமிழிகத்தில் திமுக அரசு பதவியேற்றது முதல் 44 நீதிமன்றங்களை அமைப்பதற்கு ஆணை வெளியிடப்பட்டுள்ளது. நீதித்துறை உள்கட்டமைப்புகளை மேம்படுத்துவதற்கான அணைத்து நடவடிக்கைகளும் தமிழக அரசு மேற்கொள்ளும்" என்றுத் தெரிவித்துள்ளார்.
English Summary
tamil should be declared as language of litigation in chennai hc chief minister mk stalin request