முதல்-அமைச்சர் ஸ்டாலின் பொய் பேசிவருகிறார்.. அமித்ஷா குற்றச்சாட்டு!
Chief Minister Stalin is lying. Amit Shah's allegations!
தொகுதி மறுசீரமைப்பு விவகாரம் தொடர்பாக, மக்கள் மத்தியில், முதல்-அமைச்சர் ஸ்டாலின் பொய் பேசி வருவதாக அமித்ஷா குற்றம் சாட்டி உள்ளார்.
கோவை பீளமேட்டில் இன்று புதன்கிழமை காலை பா.ஜனதா கட்சி அலுவலகம் திறப்பு விழா நடைபெற்றது. இதில் பங்கேற்று பேசிய மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா,தொகுதி மறுசீரமைப்பால் தமிழ்நாட்டில் ஒரு எம்.பி. சீட் கூட குறையாது என்றும் விகிதாச்சார அடிப்படையிலேயே தொகுதிகள் மறுசீரமைப்பு செய்யப்படும் என கூறினார்.
மேலும் தொடர்ந்து பேசிய அவர்,தென்னிந்திய மக்களுக்கு கூடுதல் தொகுதி தான் கிடைக்கும் என்றும் தொகுதி குறைய வாய்ப்பு இல்லை என்றும் நான் இங்கு உண்மையை கூறி உள்ளேன், நீங்கள் கட்டாயம் எனக்கு பதில் அளிக்க வேண்டும் என்று பேசிய அமித்ஷாபிரதமர் மோடி நிதி வழங்கவில்லை என முதல்-அமைச்சர் ஸ்டாலின் பொய்யான தகவலை கூறி வருகிறார். மத்திய அரசு நிதி வழங்கவில்லை என்பது பொய்யான தகவல் என கூறினார்.
மேலும் பிரதமர் மோடி ஆட்சியில் தமிழகத்திற்கு ரூ.5 லட்சம் கோடி நிதி கொடுக்கப்பட்டு உள்ளது என்றும் காங்கிரஸ் ஆட்சி காலத்தில் வெறும் 1.52 லட்சம் கோடி தான் வழங்கப்பட்டது என்றும் தமிழ் மக்கள் வளர்ச்சி, பண்பாட்டிற்கு உழைக்கும் பிரதமர் மோடியின் திட்டங்களை மக்களிடம் சேர்க்க வேண்டும்" என்று அவர் கூறினார்.
இதனைத்தொடர்ந்து இன்று இரவு பூண்டி வெள்ளிங்கிரியில் அமைந்து உள்ள ஈஷா யோகா மையத்தில் நடைபெறும் சிவராத்திரி விழாவில் அமித்ஷா கலந்து கொள்கிறார்.அதனை தொடர்ந்து சிவராத்திரி நிகழ்வில் கலந்து கொண்ட பின்னர் மறுநாள் காலை தனி ஹெலிகாப்டர் மூலம் கோவை விமான நிலையம் வந்தடையும் அமித்ஷா, தனி விமானத்தில் டெல்லி புறப்படுகிறார்.
English Summary
Chief Minister Stalin is lying. Amit Shah's allegations!