எலிகள் கஞ்சாவை தேடி தமிழக காவல்நிலையம் வருகின்றன - தமிழக போலீசை கேலி செய்த ஆளுநர் தமிழிசை! - Seithipunal
Seithipunal


சென்னை : கடந்த 2020-ல் மாட்டான் குப்பம் பகுதியில் 22.9 கிலோ கஞ்சா வைத்திருந்த வழக்கில் ராஜகோபால் மற்றும்  நாகேஸ்வரராவ் ஆகியோர் மெரினா காவல் நிலைய போலீசாரால் கைது செய்யப்பட்டனர். 

கைது செய்யப்பட்டவர்களிடமிருந்து கைப்பற்றப்பட்ட கஞ்சாவில் இருந்து 50 கிராம் வீதம் 2 பாக்கெட்டைகள் ஆய்வக சோதனைக்காக அனுப்பப்பட்டது.

இந்நிலையில், இந்த வழக்கின் குற்றப்பத்திரிகை மற்றும் கைப்பற்றப்பட்ட கஞ்சாவில் 11 கிலோவை, சென்னை உயர்நீதிமன்ற வளாகத்தில் உள்ள போதை பொருள் தடுப்பு சிறப்பு நீதிமன்றத்தில் போலீசார் தாக்கல் செய்தனர். 

மேலும், கடந்த 2020-ல் போலீசார் கைப்பற்றிய 22.9 கிலோ கஞ்சாவில் 11 கிலோவை எலி சாப்பிட்டு விட்டதாக காவல்துறையினர் நீதிமன்றத்தில் விளக்கம் அளித்தனர்.

இதனை அடுத்து குற்றவாளிகள் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டிற்கு போதிய ஆதாரமும் இல்லை என்று கோரிய நீதிமன்றம், குற்றவாளிகள் இருவரையும் விடுதலை செய்வதாக தீர்ப்பு வழங்கியது. 

கஞ்சாவை எலி சாப்பிடுவது இது முதல் முறை அல்ல, ஏற்கனவே கோயம்பேடு காவல் நிலையத்தில் 30 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்ட வழக்கில், 19 கிலோ எலி தின்று விட்டதாக கூறி, 11 கிலோவை மட்டுமே காவல்துறையினர் நீதிமன்றத்தில் சமர்ப்பித்து, 2 குற்றவாளிகள் விடுதலை செய்யப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது. 

இந்த நிலையில், "தமிழகத்தில் உள்ள எலிகள் எல்லாம் கஞ்சாவை தேடி காவல்நிலையம் வருகின்றன" என்று, புதுச்சேரி துணை நிலை ஆளுநர் தமிழிசை விமர்சித்துள்ளார்.

மேலும், நீதிமன்றத்தில் குறைந்த அளவு கஞ்சாவை சமர்ப்பிக்கும் காவல்துறையால், கஞ்சா வழக்கில் தொடர்புடைய இருவர் தப்பித்துவிட்டனர்.

காவல் நிலையத்தில் வைக்கப்படும் கஞ்சாவிற்கு யார் பாதுகாப்பு? எலிகளை எப்படி திருத்துவது? எலிகளின் போதையை எப்படி தடுப்பது? என்று - ஆளுநர் தமிழிசை கேள்வி எழுப்பியுள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Tamilisai Soundararajan Say About TNPolice Ganja Case


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->