தமிழக கபடி வீரர்கள் தாக்கப்பட்ட விவகாரம் - தமிழிசை கண்டனம்.!
tamilisai soundarrajan condemns tn kabbadi players attack issue
பஞ்சாப் மாநிலத்தில் தமிழக கபடி விளையாட்டு வீராங்கனைகள் தாக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவத்துக்கு அரசியல் தலைவர்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
அந்த வகையில், தமிழக கபடி வீராங்கனைகள் தாக்கப்பட்டது வேதனை அளிப்பதாக பாஜக மூத்த தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் தெரிவித்துள்ளதாவது;
"பஞ்சாபில் தமிழக கபடி விளையாட்டு வீராங்கனைகள் தாக்கப்பட்டு இருப்பது வேதனை அளிக்கிறது. அவர்களுக்கு வேண்டிய அனைத்து உதவிகளையும் தமிழக அரசு உடனே செய்ய வேண்டும். காயமடைந்த வீராங்கனைகளுக்கு சிகிச்சை அளிக்க ஏற்பாடு செய்ய வேண்டும்.
அவர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும். பிரச்சனைகள் என்ன என்று கண்டறிந்து அவர்கள் சென்றிருக்கும் பணி சிறப்பாக அமைய பக்கபலமாக இருந்து அவர்கள் பத்திரமாக திரும்புவதற்கும் ஏற்பாடு செய்ய வேண்டும்" என்று தெரிவித்துள்ளார்.
English Summary
tamilisai soundarrajan condemns tn kabbadi players attack issue