அண்ணாமலை புயல்.. நான் தென்றல் - நயினார் நாகேந்திரன் கலகல பேச்சு.!!
tamilnadu bjp leader nainar nagendran press meet
தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் இன்று மாலை கட்சித் தலைமையத்தில் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது அவர் தெரிவித்ததாவது:-
"பாஜக உண்மையான சமுதாய நீதி கட்சி. இங்கு ஒரு கிளைக்கழக செயலாளரும் மாநில தலைவராக முடியும். மாநில தலைவரும் தேசிய செயலாளராக முடியும். தற்போதைய ஜனாதிபதி திரவுபதி முர்மு, சாதாரண பெண்மணியாக இருந்து ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
இது குடும்ப கட்சி கிடையாது. அண்ணாலை பாஜக கட்சியை வளர்த்தார். இன்று என்னை தலைவர் நாற்காலியில் அமர வைத்துள்ளார். எனக்கு கொடுக்கப்பட்டது 3 வருசம். அதன்பின் இன்னொருவர் இந்த இடத்திற்கு வரலாம். உண்மையிலேயே இதுதான் சமுதாய நீதி கட்சி.
ஆனால், தமிழகத்தில் அப்படியல்ல. திமுகவில் குடும்ப ஆட்சிதான் நடக்கிறது. கலைஞர், ஸ்டாலின், உதயநிதி ஸ்டாலின், அதற்குப்பிறகு இன்னொருவர் வர இருக்கிறார். திமுக மூத்த தலைவர்கள் ஸ்டாலின் பேரனுக்கு தலைவணங்க இருக்கிறார்கள்.
ஆட்சியில் பங்கு என்பது குறித்து எங்களுடைய உள்துறை அமைச்சரும், எடப்பாடி பழனிசாமியும் அப்போது பேசி முடிவு எடுத்துக் கொள்வார்கள். கூட்டணி குறித்து அகில இந்திய தலைமை பேசியது. இதனால் கூட்டணி ஆட்சி குறித்து அவர்கள் முடிவு எடுப்பார்கள்.
பாஜக ஆட்சியில் பங்கு கேட்பது குறித்து நான் கருத்து கூற இயலாது. மக்களுக்கு எதிரான இந்த ஆட்சி வேண்டாம் என்ற தீர்மானத்தில் அதிமுக உடன் பாஜக கூட்டணி என்ற முடிவை மேலிடம் எடுத்துள்ளது" என்றுத் தெரிவித்தார்.
அப்போது செய்தியாளர்களிடம் இருந்து புயலாக இருப்பீர்களா? தென்றலாக இருப்பீர்களா? என்று கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு அவர் அண்ணாமலை புயலாக இருப்பார். நான் தென்றலாக இருப்பேன்" என்று பதில் அளித்தார்.
English Summary
tamilnadu bjp leader nainar nagendran press meet