முதல்வரின் மதுவிலக்கு சட்ட மசோதா ஒரு நல்ல நகைச்சுவை - அண்ணாமலை ட்வீட்.!
tamilnadu bjp leader tweet about mk stalin
தமிழக சட்டமன்ற பேரவையில் நேற்று முதலமைச்சர் மு.க ஸ்டாலின் கள்ள சாராய குற்றங்களுக்கான தண்டனையை கடுமையாக்குவதற்கான சட்ட திருத்தம் சட்டசபையில் நாளை (அதாவது இன்று) அறிமுகப்படுத்தப்படுகிறது என்று தெரிவித்து இருந்தார்.
இதுகுறித்து, தமிழக பாரதிய ஜனதா கட்சி தலைவர் அண்ணாமலை தனது எக்ஸ் தள பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்தப் பதிவில் தெரிவிக்கப்பட்டு இருப்பதாவது:- "கடந்த 2023 ஆம் ஆண்டு, 23 பேர் பலியாகக் காரணமாக இருந்த கள்ளச்சாராய வியாபாரி மரூர் ராஜாவுக்கு மிக நெருக்கமான அமைச்சர் செஞ்சி மஸ்தான் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
இந்த ஆண்டு, கள்ளக்குறிச்சியில் 65 பேர் பலியான பின்பும், மதுவிலக்குத் துறை அமைச்சர் முத்துசாமியைப் பதவி நீக்கம் செய்யவில்லை. திமுக மூத்த தலைவர்கள் அனைவருக்கும் நெருக்கமான, போதைப் பொருள் கடத்தல் கும்பல் தலைவன் ஜாஃபர் சாதிக்குக்கு, திமுகவில் உயர் பதவி கொடுத்து, ரூ.2,000 கோடி சம்பாதிக்கும் வரை வேடிக்கை பார்த்தீர்கள்.
இத்தனையும் செய்து விட்டு, தமிழ்நாடு மதுவிலக்கு சட்டம் 1937ல், தண்டனைகள் கடுமையாக இல்லை என்று திருத்த மசோதா கொண்டு வருகிறேன் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறுவது, இந்த ஆண்டின் ஆகச் சிறந்த நகைச்சுவை" என்று தெரிவித்துள்ளார்.
English Summary
tamilnadu bjp leader tweet about mk stalin