#தமிழகபட்ஜெட்2022 : பழங்கால கோயில்களை புனரமைக்க ரூ.100 கோடி நிதிஒதுக்கீடு.!
Tamilnadu budget 2022
தமிழக சட்டமன்றத்தில் பட்ஜெட் கூட்டத் தொடர் இன்று தொடங்குகிறது. முக ஸ்டாலின் தலைமையில் திமுக ஆட்சி பொறுப்பேற்ற முழு பட்ஜெட் இன்று நிதியமைச்சர் பி.டி.ஆர் பழனிவேல் தியாகராஜன் தாக்கல் செய்து வருகிறார்.
நிதியமைச்சர் பழனிவேல்ராஜன் 2022 - 2023 ஆம் ஆண்டுக்கான முழு பட்ஜெட்டை தாக்கல் செய்து பட்ஜெட்டில் உள்ள முக்கிய அம்சங்களை வாசித்து வருகிறார்.
தமிழகத்தில் உள்ள தொன்மையான கோயில்களை சீரமைக்க ரூ. 100 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படும்.
கொரோனாவால் உயிரிழந்த முன்கள பணியாளர்கள் குடும்பத்திற்கு ரூ.79 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படும்.
உயர்கல்வித்துறைக்கு ரூ.5,668.89 கோடி ஒதுக்கீடு செய்யப்படும்.
தமிழகத்தில் அறிவு சார் நகரம் உருவாக்கப்படும்.
இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறைக்கு ரூ.293 கோடி ஒதுக்கீடு செய்யப்படும்.