வெளியுறவு மந்திரிக்கு தமிழக முதல்வர் திடீர் கடிதம்! காரணம் என்ன?
Tamilnadu CM letter to Foreign Minister
இலங்கை அரசால் கைது செய்யப்பட்டுள்ள தமிழக மீனவர்கள் 37 பேர் மற்றும் அவர்களது மீன்பிடி படகுகளை விடுவித்திட இலங்கை அரசை வலியுறுத்திட வேண்டும் என்று தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் மத்திய வெளி உறவு துறை மந்திரிக்கு கடிதம் எழுதியுள்ளார்.
அதில், கடந்த 22 ஆம் தேதி ராமேஸ்வரம் மீன்பிடி துறைமுகத்தை சேர்ந்த 22 மீனவர்கள் 3 படகுகளுடன் மீன் பிடிக்க சென்றனர். அவர்கள் இலங்கை கடலோர காவல் படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
எனவே இலங்கை அரசால் கைது செய்யப்பட்ட மீனவர்கள் மற்றும் அவர்களது படகுகளை விடுவிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன். ஏற்கனவே விடுவிக்கப்பட்ட படகுகளை இலங்கையில் இருந்து தமிழகத்திற்கு கொண்டு வருவதற்கு மீட்பு படகுகள் மற்றும் பயணிகளுக்கு அனுமதி வழங்கவில்லை.
இலங்கை சிறையில் அடைக்கப்பட்டுள்ள மீனவர்களை சந்தித்து அவர்களுக்கு ஆறுதலும் அடிப்படைத் தேவைகளையும் வழங்கிட அனுமதி தர வேண்டும் என தமிழ்நாட்டைச் சேர்ந்த பல்வேறு மீனவ சங்கங்கள் முன்வைத்துள்ள கோரிக்கைகளை பரிசீலிக்க வேண்டும்.
மீனவர்களின் வாழ்க்கையை சீர்குலைக்கும் இந்த பிரச்சனைக்கு உடனடியாக தீர்வு காண தூதரக நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். இந்த பிரச்சனைக்கு நிரந்தர தீர்வு காண இலங்கை அதிகாரிகளிடம் எடுத்துரைத்து உரிய நடவடிக்கையை மேற்கொள்ளுமாறு மத்திய வெளியுறவுத்துறை மந்திரியை கேட்டுக்கொள்கிறேன் என குறிப்பிடப்பட்டுள்ளது.
English Summary
Tamilnadu CM letter to Foreign Minister