விடுவிக்க முடியாது: செந்தில் பாலாஜி தலையில் இடியை இறக்கிய நீதிமன்ற உத்தரவு! - Seithipunal
Seithipunal


சட்டவிரோத பணப்பரிமாற்ற தடைச் சட்ட வழக்கில் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியை விடுவிக்க மறுப்பு தெரிவித்துள்ளது. மேலும், சட்டவிரோத பணப்பரிமாற்ற தடைச் சட்ட வழக்கில் இருந்து விடுவிக்க கோரி செந்தில் பாலாஜி தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்து சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

மேலும், இந்த வழக்கின் குற்றச்சாட்டுக்கள் பதிவுக்காக வழக்கின் விசாரணை ஜூலை 22க்கு ஒத்திவைத்து சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

வழக்கின் விவரமும், பின்னணியும்:

திமுக முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி மீது கடந்த ஆண்டு சட்டவிரோத பண பரிமாற்ற தடைச் சட்டத்தின் கீழ் அமலாக்கத்துறை வழக்கு பதிவு செய்து, கைது செய்தது.

கடந்த ஒரு வருடங்களாக சிறையில் இருந்து வரும் செந்தில் பாலாஜி தாக்கல் செய்த ஜாமீன் மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்ட நிலையில், உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்து உள்ளார். இந்த வழக்கில் விரைவில் தீர்ப்பு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் அவருக்கு 49 வது முறையாக நீதிமன்ற காவலன் நீட்டிக்கப்பட்டுள்ள நிலையில், சட்டவிரோத பண பரிமாற்ற தடைச் சட்டம் வழக்கிலிருந்து தன்னை விடுவிக்க கோரி செந்தில் பாலாஜி தரப்பில் சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டிருந்தது.

 இந்த வழக்கில் இரண்டு தரப்பு வாதங்களையும் கேட்டு அறிந்த நீதிபதி அல்லி, தீர்ப்பை ஒத்தி வைத்திருந்தார். இதற்கிடையே செந்தில் பாலாஜி தரப்பில் புதிதாக இரண்டு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டது.

அதில் வங்கிகள் அளித்துள்ள ஆவணங்களுக்கும், அமலாக்கத் துறை வழங்கிய ஆவணங்களுக்கும் இடையே வேறுபாடு இருப்பதாக தெரிவிக்கப்பட்டிருந்தது. மேலும் அமலாக்கத்துறை வழங்கியுள்ள ஆவணங்களில் கையால் எழுதி திருத்தப்பட்டுள்ளதாகவும், எனவே அதனை அறிவியல் துறை ஆய்வுக்கு அனுப்பி ஆராய வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.

அவரின் இன்னொரு மனுவில், சட்டவிரோத பண பரிமாற்ற தடைச்சட்ட வழக்கில் மீண்டும் வாதங்களை முன்வைக்க அனுமதிக்க வேண்டும் என்றும் கோரிக்கை வைக்கப்பட்டிருந்தது. இந்த இரண்டு மனுக்களுக்கும் அமலாக்கத்துறை தரப்பில் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. மேலும் வழக்கை காலதாமதம் செய்யவே செந்தில் பாலாஜி இது போன்ற மனுக்களை தாக்கல் செய்து வருவதாகவும் குற்றம் சாட்டப்பட்டது.

இந்த நிலையில், சட்டவிரோத பண பரிமாற்ற தடைச் சட்டம் வழக்கிலிருந்து செந்தில் பாலாஜியை விடுவிக்க மறுப்பு தெரிவித்து சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. மேலும் இந்த வழக்கின் குற்றச்சாட்டுகள் பதிவுக்காக வழக்கின் விசாரணையை வருகின்ற 26ம் தேதிக்கு தள்ளி வைத்து உத்தரவிட்டுள்ளது. அன்றைய தினம் செந்தில் பாலாஜி நேரில் ஆஜராக வேண்டும் என்று நீதிபதி அல்லி உத்தரவு பிறப்பித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

TamilNadu DMK SenthilBalaji case Dismissed


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->