தமிழக மீனவர்கள் படகுகள்!...இலங்கை அரசின் புதிய முடிவால் தமிழக மீனவர்கள் அதிர்ச்சி! - Seithipunal
Seithipunal


தமிழகத்தில் இருந்து மீன் பிடிக்கச் செல்லும் மீனவர்கள், எல்லை தாண்டி மீன் பிடிப்பதாக கூறி இலங்கை கடற்படையினர் சிறை பிடிப்பதும், படகுகளை பறிமுதல் செய்வதும் தொடர் கதையாகி வருகிறது.

இதற்கு தமிழக அரசியல் கட்சித் தலைவர்கள் கண்டனங்களை தெரிவித்தும், இதை தடுக்குமாறு மத்திய அரசை வலியுறுத்தி வருகின்றனர்.

இந்த நிலையில், தமிழக மீனவர்களிடம் பறிமுதல் செய்யப்படும் படகுகள் குறித்து இலங்கை அரசு புதிய முடிவு எடுத்துள்ளது. அந்த வகையில் தமிழக மீனவர்கள் படகுகளை, இலங்கை கடற்படையினர் பயன்படுத்திக்கொள்ள இலங்கை அரசு அனுமதி அளித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

அண்மைக்காலமாக தமிழக மீனவர்களிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட படகுகளில்,  மன்னாரில் இருந்து 5 படகுகள், யாழ்பாணத்தில் இருந்து 8 படகுகள் என மொத்தம் 13 படகுகள் இலங்கை கடற்படையின் பயன்பாட்டிற்காக ஒப்படைக்கப் பட்டுள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது. இலங்கை அரசின் இந்த புதிய முடிவால் தமிழக மீனவர்கள் பெரிதும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Tamilnadu fishermen boats tamilnadu fishermen are shocked by the new decision of the sri lankan government


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->