தமிழ்நாட்டு மீனவர்களுக்கு மொட்டையடித்து அவமானப்படுத்திய விவகாரம் - போராட்டத்தை அறிவித்த திமுக கூட்டணி கட்சி!
Tamilnadu fishermen srilanka govt CPIM Protest
இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்ட தமிழக மீனவர்களிடம் தலா ரூ.50,000 அபராதம் பெற்று விடுதலை செய்யப்பட்ட நிலையில், 5 மீனவர்களை மொட்டை அடித்து இலங்கை அரசு அனுப்பியுள்ளது.
இதனை கண்டித்து, ராமேஸ்வரம் மீனவர்கள் தங்கச்சிமடம் வலசை பேருந்து நிலையத்தில் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
மேலும், இந்த விவகாரத்தில் மத்திய, மாநில அரசுகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் ராமேஸ்வரம் மீனவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
இந்நிலையில், இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட தமிழ்நாட்டு மீனவர்களுக்கு மொட்டையடித்து திருப்பி அனுப்பி வைத்த இலங்கை அரசைக் கண்டித்து மார்க்சிஸ்ட் கம்னியூஸ்ட் கட்சி போராட்டத்தை அறிவித்துள்ளது.
இதுகுறித்து அக்கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் வெளியிட்டுள்ள அறிவிப்பில், "இலங்கை அரசின் அராஜக போக்கிற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு கண்டனம் தெரிவித்து கொள்கிறது.
இலங்கையை கண்டித்தும், மீனவர் பிரச்சனையில் பாராமுகமாக உள்ள மத்திய அரசையும் கண்டித்து ராமேஸ்வரத்தில் வரும் செப்.20ம் தேதி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறவுள்ளது என்று தெரிவித்துள்ளார்.
English Summary
Tamilnadu fishermen srilanka govt CPIM Protest