பழங்குடியினர் குடும்பங்களுக்கு வீடு - நிதி ஒதுக்கீடு செய்த தமிழக அரசு! - Seithipunal
Seithipunal


தமிழகத்தில் உள்ள 1500 பழங்குடியினர் குடும்பங்களுக்கு வீடு கட்டுவதற்காக தமிழக அரசு ரூ. 79.28 கோடி நிதி ஒதுக்கீடு செய்துள்ளது. 

இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், 2023-2024 நிதியாண்டுக்கான சட்டப்பேரவையில் மானிய கோரிக்கையின் மீது ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் பேசினார். 

அப்போது அவர் தெரிவித்திருப்பதாவது, பொருளாதாரத்தில் பின்தங்கிய மற்றும் வீடு இன்றி தவிக்கும் 100 பழங்குடியினர், தற்போது நரிக்குறவர் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ள 500 குடும்பங்கள் என மொத்தம் 1500 குடும்பங்களுக்கு அடிப்படை வசதியுடன் கூடிய வீடுகள் ரூ 45 கோடி மதிப்பீட்டில் கட்டி தரப்படும் என அறிவித்தார்.

 

அதன்படி 2023-2024 ஆம் ஆண்டில் தமிழகத்தில் 19 மாவட்டங்களில் 1500 பழங்குடியினர்கள் வீடுகள் கட்டுவதற்கு ரூ. 79.28 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக ஆணை வெளியிடப்பட்டுள்ளது. 

இந்த வீடுகள் அனைத்தும் விரைவில் கட்டி முடிக்க தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என அமைச்சர் தெரிவித்துள்ளார் என குறிப்பிடப்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Tamilnadu government allocated funds for housing tribal families


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->