#BREKING : சென்னை புத்தக கண்காட்சிக்கு தமிழக அரசு அனுமதி.! - Seithipunal
Seithipunal


சென்னையில் பிப்ரவரி 16ம் தேதி முதல் மார்ச் 6ம் தேதி வரை புத்தகக் கண்காட்சி நடத்த தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது.

ஜனவரியில் நடைபெறவிருந்த புத்தகக் கண்காட்சி, கொரோனா நோய்த்தொற்று பரவல் காரணமாக பல்வேறு ஊரடங்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டது. அதன் காரணமாக புத்தகக் கண்காட்சி தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டது.

இந்த நிலையில் தமிழகத்தில் தற்போது கொரோனா தொற்று பாதிப்பு படிப்படியாக குறைந்து வருகிறது‌. அதன் காரணமாக பல்வேறு தளர்வுகளை அறிவித்துள்ளது தமிழக அரசு.

அந்த வகையில் சென்னையில் புத்தகக் கண்காட்சியை நடத்த தமிழக அரசு அனுமதி வழங்கியுள்ளது. அதன்படி பிப்ரவரி 16ஆம் தேதி முதல் மார்ச் 6-ஆம் தேதி வரை 45-வது புத்தகக் கண்காட்சி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், கொரோனா நோய்த்தொற்று பரவல் காரணமாக 65 வயதிற்கு மேற்பட்ட முதியவர்கள், கர்ப்பிணி பெண்கள் மற்றும் குழந்தைகள் பங்கேற்க அனுமதிக்கப்பட மாட்டார்கள். மேலும் கூட்ட நெரிசலை தவிர்க்க ஆன்லைன் மூலம் பணம் செலுத்தி நுழைவுச்சீட்டு கொடுக்கலாம் என்றும் தமிழக அரசு சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Tamilnadu govt permit 45th Book fair


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->