ரோகினி தியேட்டரில் நடைபெற்ற தீண்டாமை சம்பவத்திற்கு உதயநிதி ஸ்டாலின் கடும் கண்டனம் ! - Seithipunal
Seithipunal


நேற்று காலை சிம்பு மற்றும் கௌதம் கார்த்திக் நடிப்பில் வெளியான 10 தல  திரைப்படம் ரோகினி தியேட்டரில் ரிலீஸ் செய்யப்பட்டது. இந்தப் படத்திற்கு ரசிகர்கள் அனைவரும் பெருமளவில் வருகை தந்து படத்தை கொண்டாடி மகிழ்ந்தனர்.

இந்நிலையில் படத்திற்காக டிக்கெட் எடுத்து படம் பார்க்க வந்திருந்த நரிக்குறவர் சமூகத்தைச் சார்ந்த பெண்மணியை தியேட்டர் நிர்வாகம் படம் பார்க்க அனுமதிக்கவில்லை. இச்சம்பவம் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியது.

இது தொடர்பாக படம் பார்க்க வந்த ரசிகர்களும் பொதுமக்களும் தியேட்டர் நிர்வாகத்துடன் கண்டனம் தெரிவித்து விவாதம் செய்த நிலையில் இறுதியாக அந்த பெண்மணியை அவர்கள் படம் பார்க்க அனுமதித்தனர். இந்த சம்பவம் தொடர்பாக பல்வேறு அரசியல் கட்சியினரும் கடும் கண்டனம் தெரிவித்து வந்த நிலையில் தமிழக விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தனது கண்டனத்தினை பதிவு செய்து இருக்கிறார்.

இது தொடர்பாக பேட்டியளித்திருக்கும்  உதயநிதி ஸ்டாலின் நரிக்குறவர் சமூகத்திற்கு எதிராக ரோகினி தியேட்டரில் நடைபெற்ற தீண்டாமை கொடுமை மிகவும் கண்டனத்திற்குரியது. இது போன்ற செயல்கள் தமிழகத்தில் தலை தூக்குவதை ஒருபோதும் அனுமதிக்க முடியாது என தெரிவித்தார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

tamilnadu minister udhaanithi stalin condemns the untouchability that happens yesterday at rohini theater


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->