தமிழகத்தில் மேலும் புதிய 8 மாவட்டங்கள்! சட்டப்பேரவையில் அமைச்சர் வெளியிட்ட செய்தி! - Seithipunal
Seithipunal


தமிழகத்தில் மேலும் புதிய எட்டு மாவட்டங்கள் உதயமாகிறதா? என்ற எதிர்பார்ப்பை தமிழக சட்டப்பேரவையில் இன்று அமைச்சர் ஆற்றிய உரை ஏற்படுத்தி உள்ளது.

தமிழகத்தில் புதிதாக எட்டு மாவட்டங்களை உருவாக்க கோரிக்கை வந்துள்ளதாக சட்டப்பேரவையில் இன்று அமைச்சர் கேகேஎஸ்எஸ்ஆர் ராமச்சந்திரன் தகவல் தெரிவித்துள்ளார்.

இன்று தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் கேள்வி நேரத்தின் போது ஆரணி மற்றும் கும்பகோணத்தை தலைமையிடங்களாக கொண்டு புதிய மாவட்டங்களை அறிவிக்க கோரி உறுப்பினர்கள் சேவூர் ராமச்சந்திரன், கோவி.செழியன் உள்ளிட்டோர் கோரிக்கை வைத்தனர்.

இதற்கு பதில் அளித்து பேசி அமைச்சர், புதிய 8 மாவட்டங்களை உருவாக்க எம்எல்ஏக்கள், எம்பிக்கள் கடிதம் மூலம் கோரிக்கை வைத்துள்ளதாகவும் தகவல் தெரிவித்துள்ள அமைச்சர் தகவல் தெரிவித்துள்ளார். 

இந்த புதிய 8 மாவட்டங்களின் கோரிக்கை குறித்து முதலமைச்சர் மு க ஸ்டாலின் கவனத்திற்கு கொண்டு சென்று, நிதி நிலைக்கு ஏற்ப நடவடிக்கை ஏற்கப்படும் என்று, வருவாய் துறை அமைச்சர் கேகேஎஸ்எஸ்ஆர் ராமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

கடந்த சட்டமன்ற பொது தேர்தல் பிரச்சாரத்தின் போது, தற்போதைய முதல்வர் மு க ஸ்டாலின், திமுக ஆட்சிக்கு வந்தவுடன் கும்பகோணத்தை தலைமையிடமாக கொண்டு புதிய மாவட்டம் உருவாக்கப்படும், விருத்தாச்சலத்தை தலைமை இடமாகக் கொண்டு புதிய மாவட்டம் உருவாக்கப்படும் என்ற வாக்குறுதியும் அளித்தார்.

மேலும், தேர்தல் அறிக்கையின் போதும், நிர்வாக வசதிக்காக பெரிய மாவட்டங்கள் சிறிய மாவட்டங்களாக பிரிக்கப்படும் என்ற ஒரு வாக்குறுதியையும் அளித்திருந்தார்.

இந்த நிலையில், திமுக ஆட்சிக்கு பொறுப்பேற்று இருபத்தி ஒரு மாதங்களை கடந்த நிலையில், இதுவரை எந்த புதிய மாவட்டங்களும் உருவாக்கப்படாததால், இன்று சட்டப்பேரவையில் உறுப்பினர்களே கேள்வி எழுப்பும் நிலை உருவாகியுள்ளது.

இதில், குறிப்பிடத்தக்க வகையில் தற்போது நடந்து கொண்டிருக்கிற சட்டப்பேரவை கூட்டத் தொடரிலேயே கும்பகோணத்தை மாவட்டமாக அறிவிக்க வலியுறுத்தி தமிழக முதல்வர் முக ஸ்டாலினுக்கு, பாமகவை சேர்ந்தவரும், ஆடுதுறை சேர்மேனும், கும்பகோணம் புதிய மாவட்ட போராட்ட ஒருங்கிணைப்பு குழுவின் தலைவருமான ம.க. ஸ்டாலின் கடிதம் ஒரு லட்சம் அனுப்பும் போராட்டத்தை நடத்தி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும், தமிழகத்தில் 12 லட்சம் பேருக்கு ஒரு மாவட்டம் என்ற அளவில் புதிய மாவட்டங்களை உருவாக்க வேண்டும் என்று பாமக  வலியுறுத்திவருவது குறிப்பிடத்தக்கது. இதுகுறித்து தமிழக முதல்வரை நேரில் சந்தித்து பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கோரிக்கை வைத்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது. 
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Tamilnadu New 8 Districts TN Assembly Minister info


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->