89 வழக்கு, மொத்தம் 2,950 கிலோ கஞ்சா! தீயிலிட்டு அழித்த காவல்துறை! - Seithipunal
Seithipunal


சட்டவிரோத போதைப்பொருளை ஒழிப்பதற்கான மாநிலம் முழுவதும் எடுக்கப்பட்ட தொடர்ச்சியான முயற்சிகளின் ஒரு பகுதியாக தமிழகம் முழுவதும் போதைபொருள் நுண்ணறிவு பிரிவு போலிசாரால் 89 வழக்குகளில் கைப்பற்றப்பட்ட 2950 கிலோ கஞ்சாவை, போதைபொருள் ஒழிப்பு குழுமத்தின் மேற்பார்வையில் செங்கல்பட்டு தென்மேல்பாக்கம் பகுதியில் அமைந்துள்ள GJ Multiclave-ல் தீயிலிட்டு அழிக்கப்பட்டது.

இணை ஆணையர் (மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறை), காவல் கண்காணிப்பாளர் (போதைபொருள் நுண்ணறிவு பிரிவு) மற்றும் துணை இயக்குனர் (தடய அறிவியல் துறை) ஆகியோர்கள் அடங்கிய குழுவினரால் மேற்படி கஞ்சா தீயிட்டு அழிக்கப்பட்டது.

மேலும் போதைபொருள் நுண்ணறிவுபிரிவு போலிசாரால் கடந்த மார்ச் 2024ல் 3685 கிலோ, ஆகஸ்டு 2024ல் 6165 கிலோ மற்றும் 30.09.2024 ஆம் தேதி 2950 கிலோ முறையே 2024 ஆம் ஆண்டில் இதுவரை 12800 கி.கி கஞ்சா தீயிலிட்டு அழிக்கப்பட்டுள்ளது.

போதைபொருள் கடத்தல் / உபயோகப்படுத்து தலை முற்றிலும் தடுக்கவும், அதன் ஆபத்துகளை பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவதை நோக்கமாகக் கொண்டு இத்தகைய நடைமுறைகள் மேற்கொள்ளப்படுகிறது. 

பொதுமக்கள், போதைப்பொருள் மற்றும் மனமயக்க பொருட்களின் சட்டவிரோத விற்பனை மற்றும் கடத்தல் தொடர்பான எந்தவொரு தகவலையும் 10581 என்ற கட்டணமில்லா உதவி எண்ணிலும், 9498410581 என்ற வாட்ஸ்அப் மூலமாகவும் அல்லது spnibcid@gmail.com என்ற மின்னஞ்சல் மூலமாகவும் தெரியப்படுத்துமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Tamilnadu police Ganja Drug free TN


கருத்துக் கணிப்பு

விசிக ஆதவ் அர்ஜுனா சொன்ன கருத்துக்கள்...



Advertisement

கருத்துக் கணிப்பு

விசிக ஆதவ் அர்ஜுனா சொன்ன கருத்துக்கள்...




Seithipunal
--> -->