முதல் பரிசு ஒரு லட்சம்! தமிழ்நாடு காவல்துறை ஹேக்கத்தான்!
TamilNadu Police HACKATHON 2024 cyber crime
இணையவழி குற்றப்பிரிவு, தலைமையகம் தமிழ்நாடு காவல்துறையின் இணையவழி குற்றப்பிரிவு, தமிழ்நாடு காவல்துறை ஹேக்கத்தான் 2024 ஐ நடத்துகிறது.
இது சைபர்களத்தில் சமூகத்தில் இருக்கும் திறன்களை அடையாளம்காண, தொழில்நுட்ப வல்லுநர்கள் மற்றும் கல்லூரி மாணவர்களிடமிருந்து பங்கேற்பாளர்களை அழைத்து ஆண்டுக்கு ஒருமுறை ஹேக்கத்தான் போட்டி நடத்தப்படுகிறது.
2019 ஆம் ஆண்டு ஐஐடி மெட்ராஸ், 2022 ஆம் ஆண்டு எஸ்.ஆர்.எம். பல்கலைக்கழகம் மற்றும் 2023 ஆம் ஆண்டு செயின்ட். ஜோசப் பொறியியல் கல்லூரி போன்ற புகழ்பெற்ற நிறுவனங்களுடன் இணைந்து, தொழில்நுட்ப வல்லுநர்கள் மற்றும் கல்லூரி மாணவர்களிடமிருந்து பங்கேற்பாளர்களை அழைத்து, ஹேக்கத்தான் போட்டி நடத்தப்பட்டது.
இந்த ஆண்டுக்கான ஹேக்கத்தான், தமிழ்நாடு காவல்துறை ஹேக்கத்தான்- 2024, பிப்ரவரி 5, 2025 அன்று சென்னை பூந்தமல்லியில் உள்ள பனிமலர் பொறியியல் கல்லூரியில் நடத்தப்பட உள்ளது. பின்வரும் தலைப்புகளில் தீர்வுகளை முன்மொழிய பங்கேற்பாளர்கள் அழைக்கப்படுகிறார்கள்:
1. "DarkEye" - Intelligent Surveillance System for Dark Web
2. Tor Unveil - Deanonymizing Tor Mail (for investigation)
3. "VoIPCrack" - VoIP Call Interception and Analysis
4. Telegram Sentinel– Monitor & Analyze Telegram Channels
5. "AdShield" - Social Media Targeted Advertisement Identification & Analysis for Cyber Scams ஹேக்கத்தான் போட்டி, சுருக்கங்களை சமர்ப்பிப்புடன் தொடங்கும்.
தேர்ந்தெடுக்கப்படும் அணிகள் இறுதிப்போட்டிக்கு முன்னேறும். சிறப்பாகச் செயல்படும் அணிகளுக்கு பின்வரும் ரொக்கப்பரிசுகள் வழங்கப்படும்:
முதல் பரிசு: = 1,00,000
2வது பரிசு: 375,000
3வது பரிசு: 350,000
ஹேக்கத்தானுக்கான பதிவு டிசம்பர் 2, 2024 முதல் திறக்கப்பட்டுள்ளது மற்றும் பங்கேற்பாளர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள அதிகாரப்பூர்வ இணைப்புகள் மூலம் பதிவு செய்ய ஊக்குவிக்கப்படுகிறார்கள். பதிவு இணைப்பு: https://bit.ly/TNPOLICEHACKATHON2024
English Summary
TamilNadu Police HACKATHON 2024 cyber crime